கு.சா. பெருமாள்

கு. சா. பெருமாள் (பிறப்பு: பிப்ரவரி 10 1940) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். கு. சா., தொண்டன், வளவன், விழிப்பு, குகன் போன்ற புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர் ஒரு பத்திரிகையாசிரியராவார். மேலும் "மக்கள் தொண்டன்" (கையெழுத்தேடு - 1957), "மலைநாடு" (வார இதழ் - 1959), "மலைநாடு" (நாளிதழ் - 1961), "கூட்டுறவு" (மாத இதழ் - 1963), "இயக்கம்" (ம. இ. கா. இதழ் - 1972), "தமிழ் நேசன்" (நாளிதழ்) ஆகியவற்றில் ஆசிரியர் / துணையாசிரியராகவும், மலேசிய்த தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1956 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், புதுக்கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். என்றாலும் தமது தீவிரமான அரசியல், சமுதாயப் பிரச்சினைகள் பற்றிய கட்டுரைகளால் இவர் நன்கு அறியப்பட்டுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள் தொகு

  • "ஒரு குலமாக"
  • "சாதனையாளர் சிந்தனைகள்".

விருதுகள் தொகு

  • அரசாங்கத்தால் வழங்கப்பட்ட AMN, PJK விருதுகள்..

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கு.சா._பெருமாள்&oldid=3240515" இலிருந்து மீள்விக்கப்பட்டது