கு. அரசேந்திரன்

முனைவர் கு. அரசேந்திரன் இந்தியா, தமிழ்நாட்டில் அறியப்பட்ட ஒரு எழுத்தாளரும் ஆய்வாளரும் ஆவார்.

வாழ்க்கை வரலாறுதொகு

இவர் கங்கைகொண்டசோழபுரத்தின் அருகில் உள்ள கொக்கரணை என்ற சிற்றூரில் பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் குருசாமி என்பதாகும். உள்கோட்டையில் தொடக்க, உயர்நிலைக்கல்வி பயின்ற இவர் பூண்டி திருபுட்பம் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயன்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணத்தில் உவமைகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். படிக்கும் காலத்தில் தென்மொழி ஏடுகளைக் கற்றும் பாவாணர், பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் ஈர்ப்புண்டும் தமிழாய்வு செய்தவர். சொல்லாய்வறிஞர் அருளியார் அவர்களின் நூல்களை நன்கு படித்தறிந்து அவரது தொடர்பில் அறிவை வளர்த்து கொண்டவர். இவரின் கால் அடி தாள் சொல் வரலாறு, உலகம் பரவிய தமிழின் வேர்-கல், உயிர்க்கதறல் (பாட்டு நூல்)உள்ளிட்டவை புகழ் பெற்ற நூல்களாகும். வேர்ச்சொல்லாய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஈழத்து அறிஞர் ஈழவேந்தன் அவர்களின் திருமகளார் யாழினி அவர்கள் இவரின் வாழ்க்கைத் துணைவியார் ஆவார். சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் வாழ்ந்து வருகிறார்.

சுழியம் சொல் ஆராய்ச்சிதொகு

உலகின் பயன்படும் சுழியம் (Zero) எனும் சொல் பயன்பாட்டின் மூலம் இந்தியா என்று குறிக்கப்பட்டாலும், அது தமிழ் வழக்கில் இருந்தே தோன்றியது என்பதை தனது ஆராய்ச்சிகள் ஊடாக வெளிப்படுத்தியவர் ஆவார். சொல்லாய்வறிஞர் அருளியாரின் வேர்ச்சொல் ஆய்வுக்கட்டுரைகளில் விளக்கப்பட்ட சுழியம் பற்றிய ஆய்வை மேலும் விளக்கப்படுத்திய அறிஞர் ஆவார்.[1] இவர் எழுதிய நூல்களும் பல உள்ளன.[2]

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._அரசேந்திரன்&oldid=2163873" இருந்து மீள்விக்கப்பட்டது