கு. சித்ரா

இந்திய அரசியல்வாதி

கு. சித்ரா (G. Chitra) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் தமிழ்நாட்டின் 15 ஆவது சட்டமன்றத்திற்கு சென்றார்.[1] இவரது கணவர் பெயர் குணசேகரன். மஞ்சக்குட்டை ஊராட்சியின் முன்னாள் வார்டு உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும் இருந்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2] இவர் மே 2021-ல் நடைபெற்ற ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கான தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலிலும் அஇஅதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "Members of 15th Assembly". TN Legislative Assembly. Archived from the original on 2019-07-18. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "2016 ஏற்காடு(தனி) சட்டமன்றத்தேர்தல் முடிவுகள்". Tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Tamil Nadu Assembly election 2021, Yercaud profile: AIADMK's G Chitra won constituency in 2016-Politics News, Firstpost". Firstpost. 2021-03-19. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  4. "G Chitra | Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._சித்ரா&oldid=3928991" இலிருந்து மீள்விக்கப்பட்டது