பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றம்

(15வது சட்டமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாட்டின் பதினைந்தாவது சட்டமன்றம் என்பது 23 மே 2016 அன்று அமைக்கப்பட்டு,06 மே 2021 வரை இயங்கிவந்த சட்டமன்றக் காலத்தைக் குறிக்கும்.

ஜெயலலிதா தலைமையிலான அரசு

தொகு

பதினைந்தாவது தமிழக சட்டமன்றத்துக்குமே, மே 2016இல் 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தலை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் நிறுத்தியது. 134 தொகுதிகளில் வென்ற அதிமுகவின் சார்பில் செயலலிதா மே 23 அன்று முதல்வர் ஆனார். அவருடன் 28 பேர் அமைச்சர்கள் பதவியேற்றனர்.[1] அதிமுக 134 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 98 இடங்களிலும் வென்றது, அதிமுக 40.8% வாக்குகளையும் திமுக கூட்டணி 39.7% வாக்குகளையும் பெற்றன.[2] நவம்பர் 19, 2016 அன்று தஞ்சாவூர் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தலும் சட்டமன்ற உறுப்பினர் சீனிவேல் மறைந்ததால் திருப்பரங்குன்றத்துக்கு இடைத்தேர்தலும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 22 அன்றும் நடந்தது[3] மூன்று தொகுதிகளிலும் அதிமுக வென்றது[4] முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக செப்டம்பர் 22 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சர் ஜெயலலிதா 5 டிசம்பர் 2016 அன்று காலமானார்.[5]

பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு

தொகு

ஜெயலலிதா மறைந்த நாளின் இரவினையடுத்து, டிசம்பர் 6 அதிகாலை 2 மணி அளவில் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார்.[6] செயலலிதா அமைச்சரவையில் இருந்த 31பேரும் இவருடன் பதவியேற்றார்கள்[7]

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக வி. கே. சசிகலா பதவியேற்றார்.[8]முதல்வர் பன்னீர் செல்வம் தன் பதவியை துறந்தார்[9] பன்னீர் செல்வம் பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்[10] பன்னீரின் பதவி விலகலைத் தொடர்ந்து அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா பிப்ரவரி 5 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்[11]

அதிமுக உட்கட்சி பூசலும், அரசியல் சிக்கலும்

தொகு

7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார்.[12]இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் பன்னீர்செல்வத்தை சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்தனர். மீதமுள்ள உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளிப்பதாக சசிகலா அறிவித்தார்.

ஆளூநர் வித்தியாசாகர் ராவ் பிப்ரவரி 9, 2017 அன்று மாலை சென்னைக்கு வந்தார். 9 டிசம்பர் 2017 அன்று தமிழக ஆளுனரை பன்னீர்செல்வமும் சசிகலாவும் சந்தித்து, தங்கள் தரப்பிற்கு இருக்கும் ஆதரவுகள் குறித்து பேசினர்.[13] ஆளுநரை சந்தித்த போது சசிகலா முதல்வர் பதவி கோரிக்கையையும் அதற்கு சான்றாக தம்மை அதிமுக சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுத்த ச. உ கள் கையைழுத்து போட்ட கடிதத்தையும் அளித்தார்.[14]

கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள கடற்கரை உல்லாச விடுதியொன்றில் சுமார் 130 சட்டமன்ற உறுப்பினர்களை சசிகலா தரப்பினர் சிறைபிடித்து வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.[15] அதிமுக அமைச்சரும் சசிகலா தரப்பில் இருந்தவருமான மாபா பாண்டியராசன் பன்னீர் தரப்பிற்கு மாறினார். அமைச்சர் ஒருவர் பன்னீர் தரப்பிற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.[16] அதிமுக அவைத்தலைவர் மசூதனன் சசி தரப்புக்கிருந்த தன் ஆதரவை பன்னீர் தரப்புக்கு ஆதரவாக மாறினார்[17] மகோரா காலத்து அமைச்சர் பொன்னையன் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்தார். சசிகலா தரப்பு 120 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை ஆதரிப்பதாக கூறுகிறது[18] சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (ச. உ) மாணிக்கம் என்பவர் தான் பன்னீர் தரப்பிற்கு ஆதரவு தெரிவித்த முதல் ச. உ ஆவார்.[19] சட்டதலைமை அலுவலர் ஒரு வாரத்திற்குள் தனக்கு ஆதரவு உள்ளது என்பதை முதல்வர் பதவி கோருபவர்களை சபையில் நிருபிக்க சொல்லும்படி கூற ஆளுநருக்கு ஆலோசனை கூறியுள்ளார்[20] ச. உ கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமை அரசு வழக்கறிஞர் 119 ச.உ கள் வருவாய் துறை அதிகாரிகளிடமும் காவல் துறை அதிகாரிகளிடம் தாங்கள் அடைத்து வைக்கப்படவில்லை என்று உறுதிமொழி ஆவணத்தில் தெரிவித்துள்ளதாக கூறினார்.[21] செவ்வாய் கிழமை (நவம்பர் 14) அன்று உச்ச நீதிமன்றம் செயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறியதும் கூவத்தூரிலிருந்து அனைத்து ச. உ களும் மகிழ்ச்சியாக வெளியேறுவார்கள் என்று சசிகலா கூறினார்.[22] அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த மக்கள் சமத்துவ கட்சியின் சரத்குமார் மனித நேய மக்கள் கட்சியின் தமீம் அன்சாரி ஆகியோர் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்தனர். மதுரை தெற்கு தொகுதி ச. உ சரவணன் சசிகலா தரப்பின் பிடியிலிருந்து தப்பி வந்ததாக கூறினார்.[23][24]

13 பிப்ரவரி வரை பன்னீர்செல்வம், ஒரு அமைச்சர் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர். 10 மக்களவை உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தமாக 12 பேர் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர்.

14 பிப்ரவரி அன்று வெளியான சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் சசிகலா உள்ளிட்ட 3 பேரை குற்றவாளியென உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி கே. பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [25]. பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து தன் ஆதரவு ச. உ களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க தன்னை அழைக்குமாறு கடிதம் கொடுத்தார்.[26] ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்களை விடுத்து) அனைவரும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டதாக சசிகலா அறிவித்தார். பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் மீண்டும் ஆளுநரை சந்தித்து சட்டப்பேரவையை கூட்டவேண்டும் என்றார்கள்[27]

கே. பழனிசாமி தலைமையிலான அரசு

தொகு

16 பிப்ரவரி 2017 அன்று கே. பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிருபிக்கும்படி ஆளுநர் கூறினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான வெற்றி

தொகு

18 பிப்ரவரி 2017 அன்று பழனிசாமி பெரும்பான்மையை நிருபிக்க சட்டமன்றத்தைக் கூட்டினார்.[28] காலை 11 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியதும், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி, திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் வலியுறுத்தின. வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டும் எனவும் கோரப்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவென்பதால் தனது உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்றும் பேரவைத் தலைவர் தனபால் பேசினார். இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் மேஜை மீது ஏறி நின்று வாக்குவாதம் செய்தல், இருக்கைகளை தட்டுதல், காகிதங்களைக் கிழித்தெறிதல் என அமளி செய்தனர். பேரவைத் தலைவர் மைக் உடைக்கப்பட்டது. அவரது இருக்கை சேதப்படுத்தப்பட்டது. பேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் உடைக்கப்பட்டது. இந்த பலத்த அமளிக்கு இடையிலும், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் அமைதியுடன் இருந்தனர். இதனால் பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேறியதோடு, சட்டப்பேரவைக் கூட்டத்தை 1 மணி வரை ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியபோது மீண்டும் அமளி ஏற்பட்டு, திமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். திமுக உறுப்பினர்களை வெளியேற்றப்பட்டதையடுத்து, காங்கிரசு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.[29]

அதன்பிறகு வாக்கெடுப்பு நடந்தது. 122 வாக்குகள் பெற்று பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். பன்னீர்செல்வம் அணியினைச் சேர்ந்த 11 பேர் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.[30]

அமைச்சரவை

தொகு
துறை அமைச்சர் கவனிக்கும் துறைகள் பதவி காலம்
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை,உள்துறை,பொதுப்பணிகள், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம் மற்றும் செயற் திட்டப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் 2017 பிப்ரவரி 16 முதல்
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிதி, திட்டமிடல், சட்டமன்றம், தேர்தல், கடவுச்சீட்டு, வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 2017 ஆகத்து 21 முதல்
தமிழ் மொழித் துறை மாஃபா பாண்டியராஜன் தமிழ் மொழித்துறை 2017 ஆகத்து 21 முதல்
வனத்துறை திண்டுக்கல் சி. சீனிவாசன் வனத்துறை 2017 பிப்ரவரி 16 முதல்
பள்ளிக் கல்வித் துறை கே. ஏ. செங்கோட்டையன் பள்ளிக் கல்வித் துறை 2017 பிப்ரவரி 16 முதல்
கூட்டுறவு செல்லூர் கே. ராஜூ கூட்டுறவு, புள்ளியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன் 2017 பிப்ரவரி 16 முதல்
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை பி. தங்கமணி மின்சாரம், மரபுசார எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் கரும்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்), ஊழல் தடுப்புச் சட்டம் 2017 பிப்ரவரி 16 முதல்
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி எஸ். பி. வேலுமணி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள், நகர்ப்பகுதி, ஊரகக் குடிநீர் வழங்கல், சிறப்புத் திட்ட செயலாக்கம். 2017 பிப்ரவரி 16 முதல்
மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை டி. ஜெயக்குமார் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம் (பயிற்சி), மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் 2017 பிப்ரவரி 16 முதல்
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் சி. வே. சண்முகம் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள், சுரங்கம் மற்றும் கனிமவளம் துறை 2017 பிப்ரவரி 16 முதல்
உயர்கல்வி கே. பி. அன்பழகன் தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல், அறிவியல் & தொழில் நுட்பவியல், வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு. 2017 பிப்ரவரி 16 முதல்
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம் மருத்துவர் வி. சரோஜா மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம். 2017 பிப்ரவரி 16 முதல்
தொழில்துறை எம். சி. சம்பத் தொழில்கள் 2017 பிப்ரவரி 16 முதல்
சுற்றுச்சூழல் துறை கே. சி. கருப்பண்ணன் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு 2017 பிப்ரவரி 16 முதல்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் ஆர். காமராஜ் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு 2017 பிப்ரவரி 16 முதல்
கைத்தறி மற்றும் துணிநூல் ஓ. எஸ். மணியன் கைத்தறி மற்றும் துணிநூல் 2017 பிப்ரவரி 16 முதல்
கால்நடைப் பராமரிப்பு உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கால்நடைப் பராமரிப்பு 2017 பிப்ரவரி 16 முதல்
மக்கள் நல்வாழ்வு மருத்துவர் சி. விஜயபாஸ்கர் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் 2017 பிப்ரவரி 16 முதல்
செய்தி கடம்பூர் ராஜு செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம் 2017 பிப்ரவரி 16 முதல்
வருவாய் ஆர். பி. உதயகுமார் வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு, தகவல் தொழில்நுட்பம் 2017 பிப்ரவரி 16 முதல்
சுற்றுலா வெல்லமண்டி என். நடராஜன் சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் 2017 பிப்ரவரி 16 முதல்
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு கே. சி. வீரமணி வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம். 2017 பிப்ரவரி 16 முதல்
ஊரகத் தொழில் பி. பெஞ்சமின் ஊரகத் தொழில்கள்,குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள் 2017 பிப்ரவரி 16 முதல்
பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி கே. டி. ராஜேந்திர பாலாஜி பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி 2017 பிப்ரவரி 16 முதல்
தொழிலாளர் நலன் மருத்துவர் நிலோபர் கபில் தொழிலாளர்கள் நலன், மக்கள்தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வஃக்ப் வாரியம். 2017 பிப்ரவரி 16 முதல்
போக்குவரத்து எம். ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்திச் சட்டம் 2017 பிப்ரவரி 16 முதல்
ஆதி திராவிடரர் வி. எம். ராஜலட்சுமி ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன் 2017 பிப்ரவரி 16 முதல்
காதி மற்றும் கிராம தொழில் ஜி. பாஸ்கரன் காதி மற்றும் கிராம தொழில் மற்றும் பூதானம் மற்றும் கிராம தானம் 2017 பிப்ரவரி 16 முதல்
இந்து சமயம் மற்றும் அறநிலையம் சேவூர் எஸ். ராமச்சந்திரன் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடு 2017 பிப்ரவரி 16 முதல்
பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலன் எஸ். வளர்மதி பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன். 2017 பிப்ரவரி 16 முதல்


மேற்கோள்கள்

தொகு
 1. "Jayalalithaa and her 28-member Cabinet to be sworn in on May 23". இந்து. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 2. "DMK ahead of AIADMK in 'contested vote share'". இந்து. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 3. "Aravakurichi, Thanjavur polls to be held on Nov. 19". இந்து. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 4. "AIADMK wins all three seats in Tamil Nadu". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 5. "Jayalalithaa death: Madras HC wonders if a patient's illness details be put in public domain". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 6. "Panneerselvam sworn in as Tamil Nadu Chief Minister for third time". தி இந்து. 6 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 7. "OPS sworn in as TN CM after Jaya's death". பிசினசு இசுடேண்டர்டு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 8. "அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் 29 திசம்பர் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
 9. "VK Sasikala To Be Tamil Nadu Chief Minister, O Panneerselvam Resigns". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 10. "Governor accepts OPS resignation, no word yet on Sasi's oath of office". நியு இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 11. "Palaniswami is AIADMK legislature party leader, OPS expelled". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 14, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 12. "O Panneerselvam says he was forced to resign as Tamil Nadu CM, Sasikala calls urgent cabinet meet". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 13. "Sasikala stakes claim, all eyes on Governor". இந்து. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 14. "List of MLAs in hand, Sasikala meets TN Governor, stakes claim to form govt". டெக்கான் குரோனிகல். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 14, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 15. "Tamil Nadu MLAs cooling heels at resorts, off phone, TV". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 16. "Delay by governor on swearing an act of splitting AIADMK, I'll launch a protest tomorrow: Sasikala". நியு இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 13, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 17. "Panneerselvam gets a shot in the arm as AIADMK presidium chairman E Madhusudhanan joins his camp". பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 13, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 18. "In boost for Panneerselvam, AIADMK leader C Ponnaiyan, minister V Sathyabama join OPS camp". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 13, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 19. "One AIADMK MLA wanted to be with OPS so bad, he actually ran away from Sasikala camp". நியுசுமினிட்டு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 13, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 20. "OPS vs Sasikala: Hold floor test in Assembly within a week, Attorney General advises TN Governor". டைம்சு ஆப் இந்தி்யா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 13, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 21. "OPS vs Sasikala: Statements taken from 119 AIADMK MLAs, Tamil Nadu govt informs Madras HC". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 13, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 22. "Sasikala says she and her MLAs will leave Koovathur resort 'happily' after SC verdict on Tuesday". பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 13, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 23. "More setback for VK Sasikala as OPS camp continues to swell". நியுசு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 13, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 24. "AIADMK MLA escapes from Koovathur resort in disguise, joins Panneerselvam camp". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 13, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 25. "Edappadi Palaniswami elected AIADMK legislature party leader". இந்து. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 14, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 26. "Tamil Nadu crisis: Palanisamy meets Governor, stakes claim to form government". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 14, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 27. "ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மீண்டும் சந்திப்பு". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 15, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 28. "Tamil Nadu: Saturday's trust vote in the Assembly could go down to the wire for AIADMK". இசுகுரோல். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 17, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 29. "Stalin, DMK MLAs arrested after hunger strike at the Marina". இந்து. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 18, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 30. "Stalin, எதிர்க்கட்சியினர் இல்லாத பேரவை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி". இந்து (தமிழ்). பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு