கு. பாலசிங்கம்
குமாரசாமி பாலசிங்கம் (Coomarasamy Balasingham, 10 மார்ச் 1917 – 15 சூலை 2001) என்பவர் ஒரு முன்னணி இலங்கை தமிழ் அரசு ஊழியர்.
கு. பாலசிங்கம் | |
---|---|
பிறப்பு | 10 மார்ச்சு 1917 |
இறப்பு | 15 சூலை 2001 கனெடிகட், அமெரிக்கா | (அகவை 84)
படித்த கல்வி நிறுவனங்கள் | கொல்லங்கலட்டி தமிழ்ப்பள்ளி மகாஜனக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இலங்கை பல்கலைக்கழக கல்லூரி இலங்கை சட்டக் கல்லூரி |
பணி | குடிமைப்பணி அதிகாரி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபாலசிங்கம் 10 மார்ச் 1917 இல் பிறந்தார். [1] [2] இவர் தெல்லிப்பழையைச் சேர்ந்த தமிழ் அறிஞரான வி. குமாரசுவாமி என்பவரின் மகனாவார். [1] இவர் கொல்லங்கலட்டி தமிழ்ப்பள்ளி தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். [1] [2] இவர் கேம்பிரிட்ஜ் இளையோர் தேர்வில் பங்கேற்றபோது தமிழில் கௌரவமும் சிறப்பும் பெற்றார். [2] பின்னர் கேம்பிரிட்ஜ் மூத்தோர் தேர்வில் தேர்ச்சி பெற்றார் . [2] பள்ளிக் கல்விக்குப் பிறகு இவர் இலங்கை பல்கலைக்ழக கல்லூரியில் சேர்ந்தார், அங்கு இவர் 1937 இல் இளங்கலைமானி (தமிழ்நாட்டு வழக்கு; இளங்கலை) பட்டத்தை ஆங்கிலம், தமிழ், மெய்யியல் போன்றவற்றில் பட்டம் பெற்றார். [1] [2] இவர் குடிமைப்பணியில் சேர மிகவும் இளம் வயதானவராக இருந்ததால் இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். 1942 இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தகுதிபெற்றார். [2]
பாலசிங்கம் கேட் முதலியார் நாகநாதர் கனகநாயகத்தின் மகள் சேதுவை மணந்தார். [1] இந்த இணையருக்கு இரண்டு மகன்கள் (பாலகாங்கேயன் மற்றும் பத்மநாபன்) மற்றும் ஒரு மகள் (தில்லைசிவா) இருந்தனர். [1]
தொழில்
தொகுபாலசிங்கம் 1939 இல் குடிமைப்பணி தேர்வில் வெற்றிபெற்று 1940 இல் இலங்கை குடிமைப்பணியில் இணைந்து, [1] [2] பல பதவிகளை வகித்து பல இடங்களில் பணியாற்றினார். இவர் மாத்தறை மற்றும் புத்தளத்தில் கூடுதல் நீதித்துறை நடுவர்; இரண்டாம் உலகப் போரின் போது உதவி தந்தி சென்சார்; யாழ்ப்பாணத்திலும் கண்டியிலும் அலுவலக உதவியாளர்; ஹெரனையில் கூடுதல் உதவி அரசாங்க அதிபர் ; களுத்துறையில் உதவி அரசாங்க அதிபர்; ஹட்டன் மற்றும் கொழும்பில் பிரதி தொழிலாளர் கட்டுப்பாட்டாளர்; மட்டக்களப்பில் காணி அபிவிருத்தி உதவிப் பணிப்பாளர் போன்ற பதவிகளை வகித்தார். [2]
இவர் 1958 இல் கருவூலத்தில் வழங்கல், பணியாளர் மற்றும் நிதிக் கட்டுப்பாட்டாளராகவும், 1961 இல் கருவூலத்தின் துணைச் செயலாளராகவும் ஆனார். [1] [2] [3] பாலசிங்கம் 1964 முதல் 1970 வரை சுகாதார அமைச்சின் நிரந்தர செயலாளராக ஆனார். [1] [2]
பிற்கால வாழ்வு
தொகுபாலசிங்கம் அரசாங்க நிதி ஒழுங்குமுறைகளை திருத்தும் குழுவின் தலைவராகவும் ஊதிய மீளாய்வுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1984 இல் அமெரிக்கா சென்றார். [1] இவர் 2001 சூலை 15 அன்று கனெக்டிகட்டில் இறந்தார். [4]
குறிப்புகள்
தொகு
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 21.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 Sankarakumaran, C.. "C. Balasingham" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304050611/http://www.island.lk/2001/10/04/featur02.html.
- ↑ Somasundram, M.. "Arm of treasury, PED benumbe". http://www.sundaytimes.lk/981108/bus2.html.
- ↑ "C Balasingham (1917 - 2001)". Ancient Faces. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2021-12-03.