கு. வெ. கி. ஆசான்

கு. வெ. கி. ஆசான் (பிறப்பு: டிசம்பர், 1935) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கு. வெ. கிருஷ்ணசாமி எனும் இயற்பெயர் கொண்ட இவர் பொருளாதாரம், அரசியல், வரலாறு ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சட்டம் படித்தவர். பெரியாரியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய இவர் மொழி உரிமை, வருண சாதி உருவாக்கம் உட்பட 11 நூல்களை எழுதியிருக்கிறார். பெரியார் பேருரையாளர் எனும் பட்டத்தைப் பெற்றிருக்கும் இவர் தமிழாக்கம் செய்த "கடவுள் ஒரு பொய் நம்பிக்கை" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._வெ._கி._ஆசான்&oldid=3794860" இலிருந்து மீள்விக்கப்பட்டது