தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2009

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 20,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் 5,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி பரிசுத்தொகையினை நூலாசிரியர்களுக்கு ரூபாய் 30, 000 என்றும், பதிப்பகத்தினருக்கு ரூபாய் 10, 000 என்றும் உயர்த்தி அறிவித்தார்.[1] இத்திட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் நூலின் பிரிவு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 மரபுக்கவிதை பெரியார் காவியம் இரா. மணியன் சீதை பதிப்பகம், சென்னை.
2 புதுக்கவிதை பூட்டாங்கயிறு கவிஞர் கவிமுகில் வனிதா பதிப்பகம், சென்னை.
3 புதினம் ஏழரைப் பங்காளி வகையறா எஸ். அர்ஷியா நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
4 சிறுகதை ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள் ஆண்டாள் பிரியதர்ஷினி ஏகம் பதிப்பகம், சென்னை
5 நாடகம் (உரைநடை, கவிதை ) செம்பியன் தமிழவேள் சி. செந்தமிழ்ச்சேய் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப் பணி அறக்கட்டளை, கடலூர்.
6 சிறுவர் இலக்கியம் பச்சைக்கிளியே பறந்துவா பாவண்ணன் அன்னம் பதிப்பகம், தஞ்சாவூர்.
7 திறனாய்வு அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக் கவிதை மரபும் பெ. மாதையன் பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.
8 மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் செந்தமிழ் வளம்பெற வழிகள் த. கனகரத்தினம் (இலங்கை மணிமேகலை பிரசுரம், சென்னை.
9 பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் கடவுள் ஒரு பொய் நம்பிக்கை கு.வெ.கி. ஆசான் திராவிடர் கழக் வெளியீடு, சென்னை.
10 நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) அர்ச்சுனன் தபசு (மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம்) முனைவர் சா. பாலுச்சாமி காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்.
11 அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் சொல்வலை வேட்டுவன் பா. ரா. சுப்பிரமணியன் கயல்கவின், சென்னை.
12 பயண இலக்கியம் கம்போடியா நினைவுகள் கே.ஆர்.ஏ. நரசய்யா பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
13 வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை ந. க. மங்கள முருகேசன் தென்றல் பதிப்பகம், சென்னை.
14 நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு நீதிக்கட்சி வரலாறு க. திருநாவுக்கரசு நக்கீரன் பதிப்பகம்
15 கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியியல் வளமிகு சூரிய ஆற்றல் இயற்பியல் ஆர். வி. ஜெபா ராசசேகர் ஈடன் பதிப்பகம், மதுரை.
16 பொறியியல், தொழில்நுட்பம் சந்திரயான் சி. சரவணகார்த்திகேயன் கிழக்கு பதிப்பகம், சென்னை.
17 மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) பெரியாரைக் கேளுங்கள் மா. நன்னன் ஏகம் பதிப்பகம், சென்னை.
18 சட்டவியல், அரசியல் காப்புரிமை எஸ். பி. சொக்கலிங்கம் கிழக்கு பதிப்பகம், சென்னை.
19 பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் காந்தியப் பொருளியல் டாக்டர் மா. பா. குருசாமி குரு- தேமொழி தாயன்பகம், திண்டுக்கல்.
20 மருந்தியல், உடலியல், நலவியல் கண் நோய்களும் மருத்துவமும் டாக்டர் த. கோ. சாந்திநாதன் பதிப்புத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
21 தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) நல்லெண்ணெயின் மருத்துவ ரகசியங்கள் குரு. சண்முகநாதன் சங்கீதா வெளியீட்டகம், திருநெல்வேலி.
22 சமயம், ஆன்மீகம், அளவையியல் தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள் டாக்டர் கி. முப்பால்மணி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
23 கல்வியியல், உளவியல் கற்றலும் கற்பித்தலும் ஜவஹர் சு. சுந்தரம் கங்காராணி பதிப்பகம், சென்னை.
24 வேளாண்மையியல், கால்நடையியல் வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு முனைவர் ம. சுவாமியப்பன்,
முனைவர் மா. கல்யாணசுந்தரம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
25 சுற்றுப்புறவியல் ----- ----- -----
26 கணிணியியல் தமிழ் இணையம் தமிழ் வலைதளங்கள்: பங்களிப்பும் பயன்பாடும் ம. செ. இரபிசிங் நர்மதா பதிப்பகம், சென்னை.
27 நாட்டுப்புறவியல் நாட்டுப்புறத் தெய்வங்கள்: களஞ்சியம் - அம்மன் முதல் விருமாண்டி வரை முனைவர் சு. சண்முகசுந்தரம் காவ்யா பதிப்பகம், சென்னை.
28 வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் ----- ----- -----
29 இதழியல், தகவல் தொடர்பு ஒரு பைசாத் தமிழன் அயோத்தி தாச பண்டிதர் புலவர் வே. பிரபாகரன் திருவள்ளுவர் ஆய்வு நூலகம், சென்னை.
30 பிற சிறப்பு வெளியீடுகள் ஒன்றே சொல்! நன்றே சொல்! (மூன்று தொகுதிகள்) சுப. வீரபாண்டியன் வானவில் புத்தகாலயம், சென்னை.
31 விளையாட்டு ஒலிம்பிக் சாதனையாளர்கள் ப்ரியா பாலு நர்மதா பதிப்பகம், சென்னை.

குறிப்புகள்

  • சுற்றுப்புறவியல், வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் ஆகிய ஆகிய வகைப்பாட்டில் ஒரு நூல் மட்டும் வரப் பெற்றதால் விதி எண் 15ன் கீழ் கருதப்படவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. "சிறந்த எழுத்தாளர்களுக்கான பரிசுத் தொகை ரூபாய் 30 ஆயிரமாக உயர்வு". Archived from the original on 2011-09-29. பார்க்கப்பட்ட நாள் 2012-01-04.

வெளி இணைப்புகள்

தொகு