ஜவஹர் சு. சுந்தரம்
ஆசிரியர்
ஜவஹர் சு. சுந்தரம் (பிறப்பு: சூன் 15, 1934) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். 45 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் 1989 ஆம் ஆண்டு சூலை 31 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சிறந்த முதல்வர் என்ற பட்டமும், தேசிய அளவிலான நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார். இவர் ஈரக்காற்று, தீக்குள் விரலை வைத்தால் போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “கற்றலும் கற்பித்தலும்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கல்வியியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.