ம. செ. இரபிசிங்

ம. செ. இரபிசிங் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் இயக்குநர் (பொறுப்பு) மூதறிவுரையாளராகவும், பனாரசு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 15 நூல்களை எழுதியுள்ளார். இவருடைய மேற்பார்வையில் 15 பேர் முனைவர் பட்டமும், 23 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளனர். இவர் தமிழ், சமசுகிருதம், ஆங்கிலம், ஜெர்மனி, மற்றும் மலையாளம் மொழியில் புலமை பெற்றவர். இவர் எழுதிய “தமிழ் இணையம்/தமிழ் வலைத்தளங்கள்: பங்களிப்பும் பயன்பாடுகளும்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._செ._இரபிசிங்&oldid=3614108" இலிருந்து மீள்விக்கப்பட்டது