சு. சண்முகசுந்தரம்
காவ்யா சண்முகசுந்தரம் (பிறப்பு: டிசம்பர் 30, 1949) என்பவர் தமிழ்ப் பேராசிரியர், நூல் வெளியீட்டாளர் மற்றும் தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கால்கரை எனும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.விருது: தமிழ்காவலர் விருது, தமிழ்ச்சுடர் விருது,கவிஞானி விருது, பாரதிதாசன் விருது,கவிமாமணி விருது,சங்ககவிமணி விருது ஆகும்.
காவ்யா சண்முகசுந்தரம் | |
---|---|
பிறப்பு | சு. சண்முகசுந்தரம் டிசம்பர் 30, 1949 கால்கரை, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | காவ்யா சண்முகசுந்தரம் |
கல்வி | தமிழில் முனைவர் பட்டம் |
அறியப்படுவது | எழுத்தாளர், பதிப்பாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | வெ.சுடலைமுத்துத் தேவர், இசக்கியம்மாள் |
வாழ்க்கைத் துணை | முத்துலெட்சுமி |
பிள்ளைகள் | முத்துக்குமார் (மகன்) காவ்யா (மகள்) |
உறவினர்கள் | சகோதர,சகோதரிகள் -7 |
வலைத்தளம் | |
www.kaavyaa.com |
கல்வி
தொகுஇவர் கால்கரை ஆரம்பப் பள்ளியிலும், வடக்கன்குளம் கன்கார்டியா உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தவர். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1977-ல் “திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புற பாடல்களில் சமுதாய அமைப்பு” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.
தமிழ்ப் பணி
தொகு- பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரியில் 1978 ஆம் ஆண்டில் தமிழ்ப் பேராசியராகப் பணியில் சேர்ந்து 2006 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார்.
- செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தில் 2006 முதல் 2008 ஆம் ஆண்டு வரை முதுநிலை ஆய்வாளராக “நாட்டுப்புற அரங்கியல்” பற்றியும், 2008 முதல் 2009 ஆம் ஆண்டு வரை “காலந்தோறும் கண்ணகி கதைகள்” என்ற தலைப்பில் சிற்றாய்வும், 2008 - 2011 ஆம் ஆண்டு வரை 'நாட்டுப்புற தெய்வங்கள் வழிபாடும் பண்பாடும்' என்ற தலைப்பில் பேராய்வும் செய்தார்.
எழுத்துப் பணி
தொகு- இவர் 20 நூல்களை எழுதியுள்ளார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளும், ஐந்து நாவல்களும், 25 ஆய்வு நூல்களும், தமிழ்த் திரைப்படம், தமிழ் இலக்கியம் தொடர்பாக எழுதியுள்ளார். இவரது ஆய்வு நூல்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சாகித்ய அகாதெமி போன்றவை வெளியிட்டுள்ளன.[சான்று தேவை]
- இவரது படைப்புகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், வங்காளம் எனப் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.[சான்று தேவை]
பதிப்பு பணி
தொகுஇவர் காவ்யா பதிப்பகம் எனும் பெயரில் நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.