கூகுள் நிலப்படங்கள்

(கூகிள் தேசப்படம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூகுள் நிலப்படங்கள் அல்லது கூகுள் மேப்சு (Google Maps) ஒரு புவியியற் தகவற் தொழில் நுட்ப மென்பொருள். இது முன்னர் கூகுள் லோக்கல் எனப்பட்டது. அநேகமான நாடுகளில் வீதிகள், பயணங்களைத் திட்டமிடல் போன்றவற்றிற்கு உதவுகின்றது.[1][2]

கூகுளின் இதுபோன்ற இன்னுமோர் பதிப்பு கூகுள் ஏர்த்தாகும் இது லினக்சு, மைக்ரோசாப்ட் விண்டோசு மற்றும் ஆப்பிள் இயங்குதளக் கணினிகளில் இருந்து உலகைச் சுற்றிப் பார்வையிட உதவுகின்றது.

வசதிகள்

தொகு

கூகுள் மேப்ஸை சுட்டியைப் பாவித்து மேலும் கீழும் மற்றும் பக்கமாகவும் பார்க்கமுடியும் மேலும் சுட்டி சக்கரத்தை (Mouse Wheel) பாவித்துப் படத்தை உருப்பெருக்கியோ உருச்சிறுத்தோ காட்டமுடியும். மேலும் விசைப்பலகையில் உள்ள + மற்றும் - ஐப் பாவித்தும் உருப்பெருக்கியும் உருச்சிறுத்தும் படங்களைப் பார்வையிடலாம்.

இது இதன் போட்டியாளர்களைப் போன்றே எவ்வாறு வாகனத்தை இலக்கிற்குச் செலுத்துவதென்றும் எதிர்பார்க்கப்படும் நேரம் மற்றும் தூரம் ஆகிய விபரங்களைத் தரும்.

கூகுள் மேப்ஸ் மூன்று வழமையான பார்வைகளைத் தருகின்றது. ஒன்று தேசப்படம் இதில் வீதிகள் போன்றவிபரங்கள் உண்டு, செய்மதியூடான பார்வை, இரண்டும் சேர்ந்த பார்வை (அதாவது செய்மதி மற்றும் தேசப்படம் இரண்டும் சேர்ந்த பார்வை) இதில் வீதிப் படங்கள் தெளிவான செய்

இதில் உள்ள பக்கத்திற்கான உரலி "link to this page" வசதியானது பிறிதொரு காலத்தில் இதை மீண்டும் பாவிக்கவுதகின்றது. இதில் உள்ள அகலாங்கு நெட்டாங்கு போன்ற விபரங்கள் நாசா வேல்ட் விண்ட் (NASA World Wind), ரெறாசேவர்-அமெரிக்கா (Terraserver-USA) போன்றவற்றைப் பயனபடுத்தி சிலசமயம் இதைவிடத் தெளிவான படங்களைப் பெறலாம்.

செய்மதிப் பார்வை

தொகு

கூகுள் நிலப்படங்கள் தெளிவான செயமதியூடான படங்களை அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய பகுதிகளில் தருகின்றது (ஹவாய், அலாஸ்கா, போட்டொறிக்கோ, கன்னித் தீவுகள்) உடன் பகுதிகளாக அவுசுதிரேலியா. எகிப்து, பிரான்சு, ஈரான், ஐசுலாந்து, இத்தாலி, ஈராக், சப்பான், பேர்மூடா, குவைத், மெக்சிக்கோ, நெதர்லாந்து. ஐக்கிய இராச்சியம் போன்றபல நாடுகளில் பகுதியாகப் பார்வையிடலாம். அத்துடன் பல முக்கியமான நகரங்களையும் பார்க்கக் கூடியதாகவுள்ளது எடுத்துக் காட்டாக மாசுகோ, இசுதான்புல், மற்றும் இந்தியாவின் பிரபல நகரங்களான ஐதராபாத், பெங்களூர், சென்னை, சேலம், மும்பாய், புதுதில்லி ஆகியவற்றையும் காணக் கிடைக்கின்றது.

கூகுள் ஏர்த் படத்தில் கிடைக்கும் படங்கள் அநேகமாக 1 வருடம் பழமை வாய்ந்தது வேறு சில இடங்களில் 5 வருடங்கள் பழமை வாய்ந்தவை.

மேற்கோள்கள்

தொகு
  1. "Google Maps Metrics and Infographics". Google Maps for iPhone. Archived from the original on March 21, 2022. பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
  2. "Google Maps API". Google Developers. Archived from the original on April 20, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_நிலப்படங்கள்&oldid=4177596" இலிருந்து மீள்விக்கப்பட்டது