கூகுள் உதவியாளர்
கூகுள் உதவியாளர் என்பது கூகுள் நிறுவனத்தால் வெயிடப்பட்ட ஒரு மென்பொருள் ஆகும். கூகுள் இதனை மே 2016 ஆம் ஆண்டில் அறிவித்தது.
உருவாக்குனர் | கூகுள் |
---|---|
தொடக்க வெளியீடு | 2016 |
இயக்கு முறைமை | ஆண்ராய்டு இயங்குதளம் |
கிடைக்கும் மொழி | ஆங்கிலம், இந்தி , சப்பானிம், எசுப்பானியம், பிரஞ்சு [1] கனடா [2] அரபு, பெங்காலி, சீனம் (எளிமைப்படுத்தப்பட்ட), சீனம் (பாரம்பரிய), டேனிஷ், டச்சு, ஜெர்மன், குஜராத்தி, இந்தி, இந்தோனேசியம், இத்தாலியன், கொரியம், நோர்வேயம், போலந்தியம், போர்த்துகீசியம், உருசியம், ஸ்வீடிஷ், தமிழ், தெலுங்கு, தாய், துருக்கியம், வியட்நாமி |
உருவாக்க நிலை | Active |
மென்பொருள் வகைமை | Intelligent personal assistant |
வரலாறு
தொகுஇதனை கூகிள் மேம்பாட்டாளர் மாநாடு மே 18,2016 ஆம் ஆண்டில் வெளியிட்டார். கூகிள்ஹோம், அல்லோ எனும் செய்தி தொடர்பு மென்பொருட்களையும் அந்தச் சமயத்தில் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி திரு.சுந்தர் பிச்சை அவர்கள் இந்த இரு-வழி கூகிள் உதவியாளரினை அறிமுகம் செய்தார்.[3].பின்னர், கூகிள் டூடுலின் தலைவரான ரியான் ஜெர்ம்கிங், கூகிள் முன்னாள் அனிமேட்டர் எம்மா கோட்ஸை போன்றோர் அதனை மேம்படுத்தினர்.[4] தொடக்கத்தில் அல்லோ, கூகிள் ஹோம் போன்றவற்றிற்கு மட்டும் இதனை பயன்படுத்தும் வகையில் பிக்சல் செல்லிடத் தொலைபேசியில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.[5].பின் 2017 ஆம் ஆண்டில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மார்ஷ்மல்லோ,நொளகட் போன்றவற்றில் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.[6][7] ஆண்ட்ராய்டு வியர் 2.0 என கூறப்படும் கடிகார மென்பொருளில் இதனை பயன்படுத்தலாம்.[8].இது ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி[9] மற்றும் அண்ட்ராய்டு ஆட்டோ இன் எதிர்கால பதிப்புகளில் சேர்க்கப்படும்.[10]
தொடர்பு
தொகுகூகிள் அசிஸ்டண்ட் என்பது கூகிள் நவ் போன்று தகவல்களைப் பெற முடியும், வானிலை போன்ற விவரங்களியும் பெற இயலும். ஆனாலும் இதில் இரு-வழி மூலம் தகவல்களைப்பெற முடியும் என்பது சிறப்பு. அட்டை வடிவமைப்பில் தேடல் முடிவுகள் வழங்கப்படுவதால் எளிமையாக உபயோகப்படுத்த முடியும்.[11] கூகிள் உதவியாளர் ஒரு ஷாப்பிங் பட்டியலை பராமரிக்க முடியும். ஆனால் இந்த அம்சமானது ஏப்ரல் 2017 ஆம் ஆண்டில் கூகிள் எக்ஸ்பிரஸ் மற்றும் கூகிள் ஹோம் பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டது, இதன் விளைவாக கூகிள் பெருத்த நட்டம் அடந்தது எனவே இந்த அம்சத்தினை கூகிள் உதவியாளரிடம் தக்கவைத்தது.[12][13]
வசதிகள்
தொகுகூகிள் அசிஸ்டண்ட் உதவியுடன் ஒரு பயனர் கூகிள் தேடு பொறியில் தேடலாம். ஒரு இசைக்கோப்பை இசத்து 'இது எந்த பாடல்' என வினவ முடியும். அருகில் உள்ள சுற்றுலா தளங்கள், உணவகங்கள் ஆகிய அனைத்து தகவல்களையும் பெற முடியும். தேடல் தொடர்பான சிறு சிறு உரையாடல்களையும் நிகழ்த்தலாம். கூகிள் அசிஸ்டண்ட் எட்டு குரல்களில் தற்போது உள்ளது.
வரவேற்பு
தொகுகணிப்பொறி உலகத்தின் மார்க் ஹச்மேன் அவர்கள் கூகிள் அசிஸ்டண்ட்ஸின் பலன்களை உலகிற்கு எடுத்துரைத்தார், மேலும் இது "கார்டனா மற்றும் சிரி போன்றவற்றிற்கு சிறந்த போட்டியாக அமையும் என கூறினார்[14].
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ Martonik, Andrew (May 9, 2017). "Google Assistant inside Allo can now converse in French and Spanish". Android Central. பார்க்கப்பட்ட நாள் May 15, 2017.
- ↑ Bonifacic, Igor (May 9, 2017). "Assistant in Google Allo now supports French Canadian". MOBILESYRUP.COM. பார்க்கப்பட்ட நாள் May 15, 2017.
- ↑ Lynley, Matthew (May 18, 2016). "Google unveils Google Assistant, a virtual assistant that's a big upgrade to Google Now". TechCrunch. AOL. பார்க்கப்பட்ட நாள் March 17, 2017.
- ↑ de Looper, Christian (May 31, 2016). "Google wants to make its next personal assistant more personable by giving it a childhood". Digital Trends. பார்க்கப்பட்ட நாள் March 17, 2017.
- ↑ Savov, Vlad (October 4, 2016). "Pixel 'phone by Google' announced". The Verge. Vox Media. பார்க்கப்பட்ட நாள் March 17, 2017.
- ↑ Bohn, Dieter (February 26, 2017). "The Google Assistant is coming to Marshmallow and Nougat Android phones starting this week". The Verge. Vox Media. பார்க்கப்பட்ட நாள் March 17, 2017.
- ↑ Lunden, Ingrid (February 26, 2017). "Google Assistant, its AI-based personal helper, rolls out to Nougat and Marshmallow handsets". TechCrunch. AOL. பார்க்கப்பட்ட நாள் March 17, 2017.
- ↑ Amadeo, Ron (January 17, 2017). "Report: Android Wear 2.0 to launch February 9". Ars Technica. Condé Nast. பார்க்கப்பட்ட நாள் March 17, 2017.
- ↑ Ingraham, Nathan (January 4, 2017). "The Google Assistant is coming to Android TV". Engadget. AOL. பார்க்கப்பட்ட நாள் March 17, 2017.
- ↑ Amadeo, Ron (February 26, 2017). "Google Assistant comes to every Android phone, 6.0 and up". Ars Technica. Condé Nast. பார்க்கப்பட்ட நாள் March 17, 2017.
- ↑ Purewal, Sarah Jacobsson (October 4, 2016). "The difference between Google Now and Google Assistant". CNET. CBS Interactive. பார்க்கப்பட்ட நாள் March 17, 2017.
- ↑ "Google ruins the Assistant's shopping list, turns it into a big Google Express ad". Ars Technica. பார்க்கப்பட்ட நாள் 11 April 2017.
- ↑ "Google Assistant's shopping lists are moving to the Home app today". The Verge. பார்க்கப்பட்ட நாள் 11 April 2017.
- ↑ Hachman, Mark (September 22, 2016). "Hands-on: Google Assistant's Allo chatbot outdoes Cortana, Siri as your digital pal". PC World. International Data Group. பார்க்கப்பட்ட நாள் March 17, 2017.