கூகிள் குரோம்

கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கூகுள் குரோம் ஒரு திறமூல பல் இயங்குதள இணைய உலாவியாகும்.[1] பெப்ரவரி 2009 இன் படி, பாவிக்கப்படும் உலாவிகளில், 1.15% ஆனவர்கள் இதைப் பாவிக்கின்றனர்.[2]வெப்கிட் இன் பாகங்களையும் மொசில்லா பயர்பாக்சின் வசதிகளையும் அடிப்படையாக கொண்டுள்ளது. குரோம், நிலைத்த, வேகமான, பாதுகாப்பு கூடிய, வினைத்திறனும் எளிமையும் மிக்க, பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதன் கூகுள் குரோம் வெள்ளோட்டப் (பீட்டா) பதிப்பு, செப்டம்பர் 2, 2008 இல் வெளிவந்தது. இதன் உறுதியான முதலாவது பதிப்பானது (பதிப்பானது22 November2109 இல், கூகுள் குரோம் என்ற பெயரானது), உலாவியின் வரைகலை இடைமுகத்தில் Frame-இற்குப் பாவிக்கப்படும் பெயராகும். இதன் இடைமுகம், இன்னமும், தமிழ் உட்பட 8 இந்திய மொழிகளுக்கான, பதிப்பு விருத்தியில் உள்ளது.[3] தற்பொழுது உலகின் 53 மொழிகளுக்கான ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

கூகுள் குரோம்
தொடக்க வெளியீடுNovember 22 2109
நிலையான வெளியீடுவார்ப்புரு:Latest stable release/கூகுள் குரோம்
எழுதப்பட்ட மொழிசி++,
இயக்க அமைப்புமைக்ரோசாப்ட் விண்டோஸ், எக்ஸ்பி சேவைப் பொதி2, விஸ்டா; மாக் ஓஎஸ், லினக்ஸ் பதிப்புக்கள் விருத்தியில் உள்ளது.
அளவு8.34 மெகாபைட்
கிடைக்கக்கூடிய மொழிகள்47 மொழிகள் (தமிழ் மொழி விருத்தியில் உள்ளது)
வளர்ச்சி நிலைஉறுதியானது
வகைஇணைய உலாவி
உரிமம்பி. எஸ். டி. உரிமம்
வலைத்தளம்[pnpartner.business.site]
கூகுள் குரோம் இணைய உலவியின் சின்னம் மற்றும் பெயர் . (2011- இன்று வரை)
கூகுள் குரோம் இணைய உலவியின் சின்னம் மற்றும் பெயர் .தொழில் நுட்பக் குறிப்புக்கள்

தொகு
 • இங்கே ஒவ்வொரு கீற்றுக்கும், அதனுடன் இணைந்த நீட்சிகளையும் தனிப்பட்ட பணியாகவே குரோம் கருதும். இதை, குரோம் உலாவியில், Shift+Esc விசைகளை ஒருங்கே அழுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தவிர, உலாவியின் முகவரியில் about:memory என்பதன் மூலமும், மொத்த நினைவகத்தின் பாவனையை அறிந்து கொள்ளலாம்.


 • பக்கம் ஒன்றைப் பார்வையிடும் பொழுது, அப்பக்கத்தில் இருக்கும் இணைப்புகளின் IP முகவரிகளை, ஆட்களப் பெயர் வழங்கி (DNS) பின்னணியில் பெற்றுக் கொள்ளும். இதன் மூலம், இணைப்பொன்றை சொடுக்கும் போது, நேரடியாக, உரிய ஐபி முகவரியில் இருந்து பக்கத்தைப் பெற்றுத் தரும்.
 • இணைப்பில்லாமலே இயங்கும் வசதி. பெரும்பாலான வலைப் பக்கங்கள் இணைய இணைப்பில்லாமலே இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்படுள்ளது.[4]
 • இந்த உலாவியில், புத்தம் புதிகாக வடிவமைக்கப்பட்ட, ஜாவாஸ்கிரிப்டைக் கையாளும் வீ8 எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள், 'இது ஏனைய உலாவிகளை விட வேகமாக ஜாவாஸ்கிரிப்டைக் கையாளும்' எனக் கூறிய பொழுதும், மொசில்லா நிறுவனமோ, 'தமது டிரேஸ்மங்கி (TraceMonkey) ஜாவாஸ்கிரிப்ட் இயந்திரமே வேகமானது' எனக்கூறி வருகின்றனர்.[5]
 • about:version என்றவாறு, முகவரியில் தட்டச்சுச் செய்வதன் மூலம், கூகுள் குரோம் உலாவியின் பதிப்பை அறிந்து கொள்ளலாம்.

குறைகள்

தொகு
 1. வெப்கிட்டில், பழைய பதிப்பில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டினால், ஜாவா ஆவணப்படுத்தப்பட்ட கோப்பு, தானியங்கி முறையில் பயனரின் அனுமதி எதுவும் இன்றிக் கணினியில் இயங்கிச் செயற்படக்கூடியதாக உள்ளது. பார்க்க டாம்ஸ் ஹாட்வேர் [6] எடுத்துக்காட்டாக ஜாவா நோட்பாட் இணையமூடாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளும்.[7]
 2. இன்னமும் அச்சுத் தோற்ற வசதியில்லை. எனவே ஒரு வேண்டிய பக்கம் ஒன்றை அச்சிட முன்னர் அது எவ்வாறு வரப்போகின்றது என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை.
 3. வலையமைப்பு நிர்வாகிகள், இணைய விளம்பரப் பகுதிகளை ஹொஸ்ட் கோப்புக்கள் கொண்டு தடுப்பதுண்டு. இவ்வாறு தடுக்கப்பட்ட பக்கங்களை, தடுக்கப்பட்ட பக்கங்கள் எனப் புரிந்துகொள்ளாமல், தேவையின்றி, கூகுள் குரோம் சின்னத்துடன் கூடிய தகவலைத் தருகின்றது.

தீர்க்கப்பட்ட பிரச்சினைகள்

தொகு
 1. தமிழ் உள்ளீட்டில், எ-கலப்பை ஒலியியல் விசைப்பலகையூடாக (எ-கலப்பையின் தமிழ்99 விசைப்பலகை வேலை செய்கின்றது; பிரச்சினை இருக்கவில்லை) எழுத்துக்களை உள்ளீட்டு செய்வதில், ஆரம்பத்தில் வெளிவந்த கூகுள் குரோமில் பிரச்சினைகள் இருந்தது.[8] இதற்கு, கூகுள் குரோம் இன்னமும், பயர்பாக்ஸ் நீட்சிகளைப் பயன்படுத்தியும், தமிழை உள்ளீடு செய்ய இயலாது. இதற்கு ஒரு தீர்வாக, என்எச்எம் ரைட்டர் மென்பொருளூடாக, எந்தவொரு முறையிலும் (அதாவது ஒலியியல் முறை உட்பட) தமிழில் உள்ளீடுகளைச் செய்யலாம்.[9]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணைகள்

தொகு
 1. "Google Chrome is built with open source code from Chromium." Retrieved from: http://dev.chromium.org/developers/how-tos/getting-started பரணிடப்பட்டது 2008-09-13 at the வந்தவழி இயந்திரம்.
 2. Gruener, Wolfgang (2009-01-03). "Google Chrome crosses 1% market share again". Chicago (IL): TG Daily இம் மூலத்தில் இருந்து 2009-03-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090310161357/http://www.tgdaily.com/content/view/40575/113. பார்த்த நாள்: 2009-01-03. 
 3. "Add support for 8 Indic locales" Retrieved from: http://code.google.com/p/chromium/issues/detail?id=4473.
 4. கூகுள் குரோம் வினைத்திறன் மதிப்பீடு பரணிடப்பட்டது 2010-04-24 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது செப்டம்பர் 4 2008 (ஆங்கில மொழியில்)
 5. கூகுள் குரோம் உலாவியின் வேகத்தைச் சோதிக்கும் பயர்பாக்ஸ் பரணிடப்பட்டது 2008-09-04 at the வந்தவழி இயந்திரம் அணுகப்பட்டது செப்டம்பர் 4 2008 (ஆங்கில மொழியில்)
 6. கூகுள் குரோமில் உள்ள பிறழ்ச்சிகள் அணுகப்பட்டது 4 செப்டம்பர் 2008 (ஆங்கில மொழியில்).
 7. ஜாவா குறிப்பு எழுதி அணுகப்பட்டது 4 செப்டம்பர் 2008
 8. கூகுள் குரோம் உலாவியில் தமிழ் ஒலியியல் விசைப்பலகையூடாகத் தமிழை உள்ளிட இயலவில்லை அணுகப்பட்டது 4 செப்டம்பர் 2008
 9. என்எச்எம் ரைட்டர் ஊடாக எந்த உலாவியிலும் தமிழை உள்ளீடு செய்யலாம் பரணிடப்பட்டது 2008-10-24 at the வந்தவழி இயந்திரம் புதிய விருத்தியாளர்களுக்கான பதிப்பில் இக்குறை நீக்கப்பட்டுள்ளது. அணுகப்பட்டது 25 டிசம்பர் 2008

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகிள்_குரோம்&oldid=4035801" இலிருந்து மீள்விக்கப்பட்டது