செப்டம்பர் 4
நாள்
(4 செப்டம்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | செப்டம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
செப்டம்பர் 4 (September 4) கிரிகோரியன் ஆண்டின் 247 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 248 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 118 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 476 – கடைசி மேற்கு உரோமைப் பேரரசர் ரொமூலசு ஆகுசுதுலசு முடிதுறந்தார். ஓடாசெர் இத்தாலியின் மன்னராகத் தன்னை அறிவித்தார். மேற்கு உரோமைப் பேரரசு முடிவுக்கு வந்தது.
- 626 – சீனாவின் தாங் மன்னராக தாய்சொங் முடிசூடினார்.
- 929 – சிலாவிக் படையினர் சாக்சனி இராணுவத்தினரால் பிரண்டென்பேர்க்கில் தோற்கடிக்கப்பட்டனர்.
- 1282 – அரகொனின் மூன்றாம் பீட்டர் சிசிலியின் மன்னராக முடி சூடினார்.
- 1666 – இலண்டனின் பெரும் தீ: இலண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன.
- 1774 – ஜேம்ஸ் குக்கின் இரண்டாவது பயணத்தில் நியூ கலிடோனியா முதல்தடவையாக ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1781 – லாஸ் ஏஞ்சலஸ் நகரம் 44 எசுப்பானியக் குடியேறிகளால் அமைக்கப்பட்டது.
- 1800 – மால்ட்டா தலைநகர் வல்லெட்டாவில் பிரெஞ்சுப் படைகள் பிரித்தானியரிடம் சரணடைந்தன. கோசோ மால்ட்டாவின் ஒரு பகுதியாக வந்தது.
- 1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அரிசன் கோட்டை முற்றுகையின் போது கோட்டை தீக்கிரையாக்கப்பட்டது.
- 1870 – பிரெஞ்சுப் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அரசி யூஜின் தனது பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினாள். பிரெஞ்சு மூன்றாவது குடியரசு அமைக்கப்பட்டது.
- 1884 – குற்றவாளிகளை ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சுக்கு அனுப்பும் கொள்கையை பிரித்தானியா கைவிட்டது.
- 1886 – 30 ஆண்டுகள் போரின் பின்னர் அப்பாச்சி அமெரிக்கப் பழங்குடிகளின் தலைவர் யெரொனீமோ தனது படைகளுடன் அரிசோனாவில் சரணடைந்தார்.
- 1888 – ஜார்ஜ் ஈஸ்ட்மன் தான் கண்டுபிடித்த படம்பிடிகருவிக்கு ஈஸ்ட்மேன் கோடாக் என்பதை வர்த்தகக் குறியீடாகக் காப்புரிமை பெற்றுக் கொண்டார்.
- 1912 – உதுமானியப் பேரரசு அல்பேனியக் கிளர்ச்சியாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியதை அடுத்து கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
- 1919 – துருக்கிக் குடியரசை அமைத்த முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் அனத்தோலியா, திரேசின் எதிர்காலத்தை நிர்ணயிக்க மாநாடு கூட்டினார்.
- 1923 – அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வான்கப்பல் செனான்டோ சேவைக்கு விடப்பட்டது.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனி மீது பிரித்தானிய வான்படையின் முதல் தாக்குதல் இடம்பெற்றது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: செருமானிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவின் கிரீர் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை விடுவித்தன.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் மீதான போரில் இருந்து பின்லாந்து விலகியது.
- 1948 – நெதர்லாந்தின் அரசி விலெல்மினா சுகவீனம் காரணமாக பதவியில் இருந்து விலகினார்.
- 1951 – கண்டங்களுக்கிடையேயான முதலாவது நேரடித் தொலைக்காட்சி யப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாட்டில் இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஒளிபரப்பப்பட்டது.
- 1963 – சுவிட்சர்லாந்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணஞ் செய்த அனைத்து 80 பேரும் உயிரிழந்தனர்.
- 1970 – சால்வடோர் அயேந்தே சிலியின் அரசுத்தலைவரானார்.
- 1971 – அலாஸ்காவில் போயிங் விமானம் ஜூனோ அருகில் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 111 பேரும் உயிரிழந்தனர்.
- 1972 – மார்க் ஸ்பிட்சு ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார்.
- 1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- 1975 – அரபு-இசுரேல் முரண்பாடு குறித்த சினாய் இடைக்கால உடன்பாடு எட்டப்பட்டது.
- 1985 – கரிமத்தின் முதலாவது புலரின் மூலக்கூறு பக்மின்ஸ்டர்ஃபுலரின் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1989 – கிழக்கு செருமனியின் லைப்சிக் நகரில் மக்களாட்சி சீர்திருத்தத்திற்கு ஆதரவான முதலாவது ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
- 1996 – போதைப்பொருளுக்கு எதிரான போர்: கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படை கொலம்பிய இராணுவத் தளம் மீது தாக்குதலை நடத்தியது. மூன்று வார கரந்தடிப் போரில் குறைந்தது 130 கொலம்பியர்கல் கொல்லப்பட்டனர்.
- 1998 – இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
- 2006 – இசுரேலின் டெல் அவீவ் நகரின் பாடசாலை ஒன்றின் அடியில் கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு புதைகுழிக் குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
- 2007 – சூறாவளி ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
- 2010 – நியூசிலாந்தின் தெற்குத் தீவில் இடம்பெற்ற 7.1 அளவு நிலநடுக்கத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.
பிறப்புகள்
- 973 – அல்-பிருனி, பாரசீக மருத்துவர், பல்துறையறிஞர் (இ. 1048)
- 1824 – ஆன்டன் புரூக்னர், ஆத்திரிய இசையமைப்பாளர் (இ. 1896)
- 1825 – தாதாபாய் நௌரோஜி, இந்திய அரசியல்வாதி (இ. 1917)
- 1880 – பூபேந்திரநாத் தத்தர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1961)
- 1888 – ஒஸ்கார் சலெமர், செருமானிய ஓவியர், சிற்பி, வடிவமைப்பாளர் (இ. 1943)
- 1902 – தி. சதாசிவம், தமிழக இதழாசிரியர், பாடகர் (இ. 1997]])
- 1926 – ஐவன் ஈலிச், ஆத்திரிய போதகர், மெய்யியலாளர் (இ. 2002)
- 1927 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்க கணினி அறிவியலாளர் (இ. 2011)
- 1941 – சுசில்குமார் சிண்டே, ஆந்திராவின் 19வது ஆளுநர்
- 1952 – ரிஷி கபூர், இந்திய நடிகர்
- 1957 – பைசல் காசிம், இலங்கை அரசியல்வாதி
- 1958 – ஜேக்குவிலைன் எவிட், அமெரிக்க வானியலாளர்
- 1962 – சின்யா யாமானாக்கா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவர்
- 1962 – கிரான் மோரி, இந்தியத் துடுப்பாளர்
- 1972 – டேனியல் நெஸ்டர், செர்பிய-கனடிய டென்னிசு வீரர்
- 1981 – பியான்சே நோல்ஸ், அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்
- 422 – முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)
- 1323 – ஜெஜீன் கான், சீனப் பேரரசர் (பி. 1303)
- 1809 – யாக்கூப் ஆஃப்னர், செருமானிய-டச்சு பயண எழுத்தாளர் (பி. 1754)
- 1907 – எட்வர்டு கிரெய்கு, நோர்வே இசையமைப்பாளர் (பி. 1843)
- 1942 – கே. பாலசிங்கம், இலங்கை அரசியல்வாதி (பி. 1876)
- 1965 – ஆல்பர்ட் சுவைட்சர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-காபோனிய மதப்பரப்புனர், மருத்துவர் (பி. 1875)
- 1977 – இ. எஃபு. ஷூமாசர், செருமானிய-ஆங்கிலேயப் பொருளியலாளர் (பி. 1911)
- 1990 – லாரன்ஸ் ஏ க்ரீம், அமெரிக்க வரலாற்றாளர் (பி. 1925)
- 2006 – இசுடீவ் இர்வின், ஆத்திரேலிய இயற்கை ஆர்வலர் (பி. 1962)
- 2007 – குமாரி ருக்மணி, தமிழகத் திரைப்பட நடிகை (பி. 1929)
சிறப்பு நாள்
- குடியேறிகள் நாள் (அர்கெந்தீனா)
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "செப்டம்பர் 4 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்