கூகூர் குகேஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
கூகூர் குகேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் திருச்சி மாவட்டத்தில் கூகூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [1]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலின் மூலவராக குகேஸ்வரர் உள்ளார். மூலவர் மேற்கு திசை நோக்கிய நிலையில் உள்ளார். இங்குள்ள இறைவி கல்யாணசுந்தரி ஆவார். நவராத்திரி, கார்த்திகை, சிவராத்திரி, ஆண்டுப்பிறப்பு, பொங்கல், பௌர்ணமி நாட்களில் விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.[1]
அமைப்பு
தொகுதிருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். அருகே நவக்கிரக சன்னதி உள்ளது. கிழக்கில் பைரவரும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். [1]
மற்றொரு கூகூர்
தொகுதஞ்சாவூர் மாவட்டததில் கூகூர் என்ற பெயரில் ஒரு ஊர் உள்ளது. அங்குள்ள கோயில் ஆம்பரவனேஸ்வரர் கோயிலாகும்.[2]