கூகூர் ஆம்பரவனேஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கூகூர் ஆம்பரவனேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கூகூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஆம்பரவனேஸ்வரர் கோவில்
ராஜகோபுரம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:கூகூர், கும்பகோணம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கும்பகோணம்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:ஆம்பரவணேஸ்வரர்
தாயார்:மங்களாம்பிகை
வரலாறு
கட்டிய நாள்:பத்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[2]

மாங்கனி தொகு

முற்காலத்தில் இக்கோயிலில் உள்ள தல மரமான மாமரத்தில் வருடத்திற்கு ஒரு மாங்கனி காய்த்ததாகவும் அதனை உண்டு துர்வாச முனிவர் தவம் செய்து வந்துள்ளார். பாண்டவர்கள் திரௌபதையுடன் வழிபாடு செய்ய வந்தபோது அக்கனி மீது ஆசைப்பட, அதை அறிந்த பீமன் அதனைப் பறித்து திரௌபதையிடம் தருகிறார். அதனை உணர்ந்த கிருஷ்ணர் துர்வாசருக்கு அது தெரிந்தால் கோபப்பட்டு விடுவார் என்று உணர்ந்து அக்கனியை அம்மரத்தில் பொருந்தச் செய்தார். ஆதலால் இத்தலத்தை அருந்தமாங்கனி பொருந்திய தலம் என்பர்.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஆம்பரவனேஸ்வரர், மங்களாம்பிகை சன்னதிகளும், நவகிரக உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[3] மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கோயிலின் முகப்பில் உள்ள கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், நடராஜர், துர்வாசர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, கங்காளமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். மங்களாம்பிகை சன்னதி கோயிலின் இடப்புறத்திலும், நவக்கிரக சன்னதி திருச்சுற்றிலும் அமைந்துள்ளன. லிங்க வடிவில் உள்ள மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

குடமுழுக்கு தொகு

இக்கோயிலின் குடமுழுக்கு ஜய வருடம் ஆவணி மாதம் 26ஆம் நாள் (11 செப்டம்பர் 2014) அன்று நடைபெற்றது.

மற்றொரு கூகூர் தொகு

திருச்சி மாவட்டததில் கூகூர் என்ற பெயரில் ஒரு ஊர் உள்ளது. அங்குள்ள கோயில் குகேஸ்வரர் கோயிலாகும்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. தஞ்சாவூர் சிவன் கோயில், அருள்மிகு ஆம்பரவனேஸ்வரர் திருக்கோயில்
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. அருள்மிகு குஹேஸ்வரர் திருக்கோயில்

படத்தொகுப்பு தொகு