கூடலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா

கூடலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், கூடலூரில் அமைந்துள்ள ஒரு வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகும்.

பூங்கா அமைவிடம் தொகு

இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவானது கூடலூரை அடுத்த தேவாலா அரசு தோட்டக் கலைப் பண்ணையில், ரூ.20 லட்சம் செலவில் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டது.[1] இப்பூங்காவுக்காக 0.25 ஏக்கரில் பசுமை குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவாலா தோட்டக்கலைப் பண்ணையில் ஆண்டு முழுவதும் வண்ணத்துப்பூச்சிகளை வரவழைக்கும் வகையில், வண்ணத்துப்பூச்சிகளைக் கவர குரோடோலேரியா லாஞ்டெஸ் உட்பட்ட 12 வகையான செடிகள் வளர்க்கப்படுகின்றன. பருவகாலத்தில், இச்செடிகளில் வண்ணத்துப்பூச்சி முட்டையிட்டு, அவை வளர்ந்து வண்ணத்துப்பூச்சிகளாக இடம்பெயர்ந்து செல்கின்றன. இதில் வண்ணத்துப் பூச்சிகளின் இரை, இனப்பெருக்கம், முட்டையிடுதல் ஆகியவற்றுக்கான மலர்ச் செடிகள் வளர்க்கப்பட்டு, சீரான வெப்பநிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தும்பை, சங்கு வகைகளைச் சார்ந்த செடிகளை வண்ணத்துப் பூச்சிகள் அதிக அளவில் நாடி வருகின்றன. இதையறிந்து, கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்தில், சோதனை முறையில் குரோடோ லேரியா லாஞ்டெஸ் செடிகள் வளர்க்கப்படுகின்றன. பருவகாலத்தில், இச்செடிகளில் கூட்டம், கூட்டமாக வண்ணத்துப்பூச்சிகளை காண முடியும். இப்பூங்காவைச் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலப்படுத்தும் வகையில், நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு". செய்தி. தினகரன். Archived from the original on 2022-10-17. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சுற்றுலாப் பயணிகளை கவரும் கூடலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா". செய்திக் கட்டுரை. தி இந்து. 22 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)