கூட்டு விளைபொருள்

கூட்டு விளைபொருள் (An adduct) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனித்த அல்லது வேறுபட்ட மூலக்கூறுகளின் கூட்டு வினையினால் விளைந்த விளைபொருளாகும். இந்த விளைபொருளானது, ஒரு ஒற்றை வினையின் விளைவாக அனைத்து பகுதிப்பொருட்களின் அனைத்து அணுக்களையும் கொண்ட ஒரு விளைபொருளாக அமைகிறது.[1] விளைபொருளானது ஒரு தனித்த மூலக்கூறாகும். உதாரணமாக சோடியம் பைசல்பைட்டு ஆல்டிகைடு மூலக்கூறுடன் இணைந்து சல்போனேட்டைத் தருகிறது.   இது பல்வேறு மூலக்கூறுகளின் நேரடி கூடுதலிலிருந்து விளைவிக்கப்படுகிறது. அனைத்து மூலக்கூறுகளின் அணுவையும் உள்ளடக்கியது.

கூட்டு விளைபொருட்கள் பெரும்பாலும், லூயிசு அமிலங்களுக்கும், லூயிசு காரங்களுக்கும் இடையேயான வினையின் விளைவாக உருவாகின்றன.[2] லூயி அமிலமான போரேன் மற்றும் லூயி காரமான டெட்ராஐதரோஃப்யூரான் (THF): BH3•O(CH2)4 அல்லது டை எத்தில் ஈதரில் BH3•O(CH3CH2)2 உள்ள ஆக்சிசன் அணு இவை இணைந்து உருவாகும் கூட்டு விளைபொருட்கள் மேலே சொல்லப்பட்ட லூயிசு அமிலங்களுக்கும், லூயிசு காரங்களுக்கும் இடையேயான வினையின் விளைவாக உருவாகும் விளைபொருட்களுக்கான மிகச் சிறந்த உதாரணமாகும்.

  BH3 மற்றும் THF இவற்றின் வினையால் உருவான லூயிசு சேர்க்கைப் பொருளின் பந்து-குச்சி ஒப்புரு

மூலக்கூற்றில் காணப்படும் கொள்ளிட நெருக்கடி (steric hindrance) காரணமாக, கூட்டு விளைபொருளை உருவாக்க முடியாத சேர்மங்கள் அல்லது கலவைகள் தடுக்கப்பட்ட லூயிசு இணைகள் என அழைக்கப்படுகின்றன.

கூட்டு விளைபொருட்கள் இயல்பு நிலையில் மூலக்கூறுகள் அல்ல. எத்திலீன் அல்லது கார்பன் மோனாக்சைடு CuAlCl4 சேர்மத்தோடு சேர்ந்து உருவாகும் கூட்டு விளைபொருட்கள் திண்ம நிலை வேதியியலில் காணப்படும் மிகச் சிறந்த உதாரணமாகும். பிந்தையது, விரிவாக்கப்பட்ட படிகக்கூடு அமைப்புடன் திண்மமாக உள்ளது. சேர்மத்தின் உருவாக்கத்தில், ஒரு புதிய விரிவாக்கப்பட்ட நிலை ஒன்று உருவாகிறது. இந்நிலையில் வாயு மூலக்கூறுகள் தாமிர அணுக்களின் அமைப்பின் ஊடாக ஈனிகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன (இடைநுழைவு செய்யப்பட்டுள்ளன). இந்த வினையும் ஒரு காரத்துடன் லூயி அமிலத்துடனான வினையாகக் கருதப்படலாம். தாமிர அணுவானது, எதிர் மின்னியை ஏற்கும் பணியையும், வாயு மூலக்கூறில் காணப்படும் பை எதிர் மின்னிகள் எதிர்மின்னிகளை வழங்கும் பணியையும் செய்கின்றன.[3]

கூட்டு விளைபொருள் அயனிகள்

தொகு

ஒரு சேர்க்கை அல்லது கூட்டு விளைபொருளின் அயனியானது முன்னோடி அயனிலிருந்து உருவாகிறது மற்றும் அந்த அயனியின் அனைத்து அணுக்கள் மற்றும் கூடுதல் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அனைத்தையும் கொண்டுள்ளது.[4] சேர்க்கை அல்லது கூட்டு விளைபொருள் அயனிகள் பெரும்பாலும் நிறை நிறமாலைமானி அயனி மூலத்தில் உருவாக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "adduct". Compendium of Chemical Terminology Internet edition.
  2. Housecroft, Catherine E.; Sharpe, Alan G. (2008). "Acids, bases and ions in aqueous solution". Inorganic Chemistry (3rd ed.). Harlow, Essex: Pearson Education. p. 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-175553-6. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
  3. Capracotta, M. D.; Sullivan, R. M.; Martin, J. D. (2006). "Sorptive Reconstruction of CuMCl4 (M = Al and Ga) upon Small-Molecule Binding and the Competitive Binding of CO and Ethylene". Journal of the American Chemical Society 128 (41): 13463–13473. doi:10.1021/ja063172q. பப்மெட்:17031959. 
  4. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "adduct ion (in mass spectrometry)". Compendium of Chemical Terminology Internet edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டு_விளைபொருள்&oldid=3454112" இலிருந்து மீள்விக்கப்பட்டது