கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி
கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி ( Gorkha National Liberation Front) என்பது மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் தோன்றிய கட்சி ஆகும். கூர்க்காலாந்து மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுபாசு கெய்சிங் இக்கட்சியை 1980 இல் தொடங்கினார்.[1]
போராட்டம்
தொகு1980 களில் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்குப் பகுதிகளான டார்ஜிலிங், டோவர்ஸ், டேரை ஆகிய நேபாளி மொழி பேசப்படுகிற இடங்களில் கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி தனது போராட்டத்தை மிகவும் முனைப்பாகக் கொண்டு சென்றது. இதன் விளைவாக 1988 ஆக்சுடு 22 இல் கூர்க்கா தேசிய விடுதலை முன்னணிக்கும் அரசுக்கும் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. டார்ஜிலிங் மலை உடன்பாடு என்பது அதன் பெயர். அவ்வுடன்பாட்டின் படி டார்ஜிலிங் கூரக்கா மலை கவுன்சில் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார்கள். அதை ஏற்றுக்கொண்டு கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி தனது கூர்க்காலாந்து போராட்டத்தைக் கைவிட்டது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்
தொகு- ↑ Rai, Joel (12 June 2008). "Redrawing the map of Gorkhaland". Indian Express. http://archive.indianexpress.com/news/redrawing-the-map-of-gorkhaland/321606.