சுபாசு கெய்சிங்

இந்திய அரசியல்வாதி

சுபாசு கெய்சிங் (Subhash Ghisingh 22 சூன் 1936–29 ஜனவரி 2015) என்பவர் கோர்க்கர்களுக்குத் தனி மாநிலம் வேண்டும் என ஒரு இயக்கத்தைத் தொடங்கியவர்.[1]

இளமைக் காலம் தொகு

இந்தியாவில் தார்ஜிலிங் மாவட்டத்தில் தேயிலைத் தோட்டத்தில் பிறந்தார். படையில் கோர்க்கர் ரைபிள்ஸில் சேர்ந்தார். படையில் பணியாற்றும்போதே 1959 இல் பள்ளிப் படிப்பை முடித்தார். 1960 இல் படையை விட்டு வெளியேறினார். திந்தரிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1961 இல் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். அங்கு கல்லூரி முதல்வரோடு சண்டை ஏற்பட்டதால் கல்லுரியிலிருந்து விலகினார். தார்ஜிலிங் அரசுக் கல்லூரியில் 1963 இல் புகுமுக வகுப்பில் பட்டம் பெற்றார். இரண்டாம் ஆண்டு இளங்கலை வகுப்பில் படிக்கும்போது அரசியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். படிப்பைக் கைவிட்டார். தருண் சங்கத்தில் சேர்ந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

கூர்க்காலாந்து போராட்டம் தொகு

1968 இல் சுபாசு கெய்ஸிங் நீலோ ஜண்டா என்ற ஓர் அரசியல் அமைப்பை தோற்றுவித்தார். 1979 ஏப்பிரல் 22 இல் தார்ஜிலிங்கில் நேபாள மொழி பேசுகிற மக்களுக்காகத் தனி மாநிலம் ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். பின்னர் கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார். கூர்க்காலாந்து என்ற தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை இந்த முன்னணி முன் வைத்துப் பல போராட்டங்களை நடத்தியது. வன்செயல்களும் நிகழ்ந்தன. இதன் விளைவாக 1988 ஆக்சுடு 22இல் ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி தார்ஜிலிங் கூர்க்கா மலை கவுன்சில் என்னும் பெயரில் தன்னதிகார அமைப்பு ஒன்று உருவானது. இந்தக் கவுன்சிலுக்கு பொருளாதாரம், கல்வி, சுற்றுலா போன்ற துறைகளில் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டன. சுபாசு கெய்சிங் தலைமையில் இருந்த முன்னணிக் கட்சி மூன்று முறை வெற்றி பெற்றதால் இவர் கவுன்சிலின் தலைவராக இருந்தார்.[2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள் தொகு

  1. Paul, Bappaditya. "Gorkhaland is my monkey". Perspective. The Statesman, 11 January 2007. Archived from the original on 12 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 ஜூலை 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. http://gorkhapedia.wikidot.com/subash-ghisingh
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாசு_கெய்சிங்&oldid=3555064" இலிருந்து மீள்விக்கப்பட்டது