கூலப் பதன்கலம்
கூலப் பதன்கலம் (grain elevator) என்பது கூலத்தைத் தேக்கிவைப்பதற்கான ஒருவேளாண் ஏந்து அமைப்பாகும். கூல வணிகத்தில், கூலப் பதன்கலம் எனும் சொல் வாளி ஏந்தி அமைந்த கோபுரத்தையோ அல்லது கீழிருந்து கூலத்தைக் காற்றால் மேல்நோக்கி ஊதி கூலக் களஞ்சியத்துக்குள் தள்ளும் வளிமக் கடத்துபட்டையையோ கூட குறிப்பிடுகிறது.
கூலப் பதன்கலம் Grain elevator | |
---|---|
பெரும்பாலான வேளைகளில் கூலப் பதன்கலம் சொல் முழுப் பதன்கல வளாகத்தையும் குறிப்பதுண்டு. இவ்வளாகத்தில் எடை மேடையும் ஓர்வு அலுவலகமும் கூலப் பதன்கலத்தோடு கூட அமையும்மிது மேலும் கூலப் பதன்கலத்தை இயக்கிக் கட்டுபடுத்தும் ஆட்சியமைப்பையும் குறிப்பதும் உண்டு.
கூலப் பதன்கலம் வருமுன் கூலம் பைகளில் நிரப்பி தையலிட்டு கையாளப்பட்டது. மூட்டைகளில் கட்டாமல் கூலங்கள் பேரளவில் கையாளப்பட்டதில்லை. வணிகர் ஜோசப் டார்ட்டும் பொறியாளர் இராபர்ட்டு தன்பார் ஆகிய இருவரும் கண்டுபிடித்த டார்ட்டுப் பதன்கலம் மாபெரும் புதுமைபுனைவாகும். இது நியூயார்க், பபலோ வில் 1942இலும் 1943 இலும் வடிவமைக்கப்பட்டது. ஆலிவர் எவான்சின் நீராவியால் இயங்கும் அரைவை ஆலைகளைப் பயன்படுத்தி, இவர்கள் கூலத்தைக் கப்பல் மேல்தளத்தில் இருந்து வாரி, ஒரு கடற்கால் வழியாக கடற்கரைக் கோபுரத்துக்கு ஏற்றினர்.[1]
தொடக்க கால பதன்கலங்களும் தேக்கக் கலங்களும் மரச் சட்டங்களால் அல்லது மரப்பலகைகளால் கட்டியமைக்கப்பட்டன. இவை தீப்பிடித்துக் கொண்டன. கூலப் பதன்கலத் தேக்ககங்கள், தொட்டிகள், களஞ்சியங்கள் இப்போது வலுவூட்டிய கற்காரையாலோ எஃகாலோ கட்டியமைக்கப்படுகின்றன. வாளை வகை ஏற்றிகள் பகிர்வகத்துக்குக் கொண்டுசெல்கின்றன. அங்கிருந்து கூலமணிகள் கடத்துபட்டை வழியாக கீழே விழுந்து தேக்கிகளிலோ, களஞ்சியங்களிலோ தொட்டிகளிலோ தேக்கி வைக்கப்படுகின்றன. தேவைப்படும்போது அவற்றைக் கடத்துபட்டை வழியாகவோ ஈர்ப்பைப் பயன்படுத்தியோ காலி செய்யலாம். இவ்வாறு தேக்கிகல், களஞ்சியங்கள், தொட்டிகள் ஆகியவற்றில் இருந்து அகற்றிய பிறகு கூலமணிகள் எடையிட்டு சரக்குந்துகளிலும் தொடர்வண்டி இணைப்புப் பெட்டிகளிலும் ஏற்றிப் போக்குவரத்து செய்யப்படுகின்றன. கப்பலி ஏற்றி அயல்நடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
பயன்பாடும் வரையறைகளும்
தொகுஆத்திரேலியாவில் கூலப் பதன்கலம் எனும் ஆங்கிலச் சொல் கூலம் ஏற்றும் கோபுரங்களுக்கே பயன்படுகிறது. ஆனால், கூலப் பெறுகை, தேக்க வளாகம் பெறும்புள்ளி அல்லது கோதுமைத் தொட்டி அல்லது களஞ்சியம் எனவே அழைக்கப்படுகிறது. பேரளவு கூலப் பெறுகை, தேக்கல், போக்குவரத்து செய்தல் செயல்முறைகள் பெருந்திரள் கையாளல் எனப்படுகிறது.
கனடாவில் கூலப் பதன்கலம், உலகளாவிய கூலப் பகிர்ந்தளிப்புக்கு உழவர் கூலத்தை விற்பனை செய்யும் இடத்தைக் குறிக்கப் பயன்படுகிறது. அல்லது போக்குவரத்து செய்ய கூலம் தேக்கும் இடத்தைக் குறிக்கப் பய்ன்படுகிறது. கனடியக் கூலச் சட்டம், பிரிவு-2 பலவகைக் கூலப் பதன்கலங்களைப் பின்வருமாறு வரையறுக்கிறது.[2]
- முதன்மை கூலப் பதன்கலம் ( 1971 க்கு முன் ஊர்க கூலப் பதன்கலங்கள்" ) நேரடியாக கூலத்தை உழவரிடமிருந்து தேக்கிவைக்கவோ மேலனுப்பவோ இரண்டுக்குமாகவோ பெறுகிறது.
- செயல்முறைக் கூலப் பதன்கலம் (1971 க்கு முன் ஆலைப் கூலப் பதன்கலங்கள்) கூலத்தை மேலும் பதப்படுத்தவோ வேறு விலைபொருள்களைச் செய்யவோ கூலத்தைப் பெற்றுத் தேக்கிவைக்கின்றன .
- அறுதிக் கூலப் பதன்கலம் கூலம் எடையிட்டு ஆய்வு செய்து தூயமைபடுத்தித் தேக்கிவைத்த கூலதைப் பெற்று மேலனுப்புகிறது.
- பரிமாற்றக் கூலப் பதன்கலம் (1971 க்கு முன் கீழைப் கூலப் பதன்கலங்கள் ) மற்றொரு பதன்க்ளத்தில் எடையிட்டு ஆய்வு செய்த கூ லத்தைப் பெற்று வேறு இடத்துக்குப் பரிமாற்றுகிறது. இவை அயல்நாட்டில் இருந்து அல்லது கீழை நாடுகளில் இருந்து பெறும் கூலத்தைத் தூய்மை செது தேக்கிவைப்பதும் உண்டு.
வரலாறு
தொகுநியூயார்க், பபலோவில் 1843 இல் உருவாகிய நீராவியால் இயங்கும் கூலப் பதன்கலத்தின் தோற்றம் தவிர்க்கவியலாததும் அதேவேளையில் பேரளவு செல்வம் திரட்டவுமே எனலாம். எரீ கால்வாய் 1925 இல் வெட்டப்பட்டதும், பபலோ அமெரிக்கப் புவிப் பரப்பில் த்னியொரு சிறப்பிடம் பெறலானது. இது இரண்டு மாபெரும் அனைத்து நீர்த்தடகங்களுக்கு இடையில் அமைந்துவிட்டது: ஒன்று நியூயார்க் துறைமுகத்தில் இருந்து அட்சன் அற்ரின் வழியாக அல்பேனியூடாக அதற்கப்பால் உள்ள பபலோ துறைமுகத்தை இணைத்தது. அடுத்தது, கிரேட் ஏரிகள் பகுதியில் இருந்து எப்புறமும் வடக்கில் கனடாவுக்கும் மேற்கில் மிச்சிகான், விசுகான்சினுக்கும் தெற்கில் டெலெடோ, கிளீவ்லாந்துக்கும் கிழக்கில் அட்லாண்டிக் கடலுக்கும் படகில் போகமுடிந்த வழியாக அமைந்துவிட்டது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Brown, William J. (2013). American Colossus: The Grain Elevator 1843 to 1943. Colossal Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0578012612.
- ↑ "Descriptions of types of grain elevators licensed by the Canadian Grain Commission". Grainscanada.gc.ca. 2010-01-12. Archived from the original on 2013-11-20. பார்க்கப்பட்ட நாள் 2013-03-28.
வெளி இணைப்புகள்
தொகு- Grain elevators in West Texas பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- Complete Photographic Record of the Remaining Canadian Prairie Grain Elevators
- Vanishing Landmarks: Photographs of standing and demolished Grain Elevators with information and maps.
- Grain Elevators: Buffalo's Lost Industry பரணிடப்பட்டது 2012-06-20 at the வந்தவழி இயந்திரம்
- Buffalo Grain Elevators: A bibliography by The Buffalo History Museum
- Bruce Selyem, Grain Elevator Photographer
- Pixelgrain: Mapping Transition in the Canadian Prairies
- "Inside a Modern Grain Elevator" Popular Science Monthly, February 1930, p. 45. Drawing of how 1930s grain elevator worked at sea ports.
- Our Grandfathers' Grain Elevators blog with specifications of reinforced-concrete elevators