கூழை
கூழை என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும்.
கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது:
- "இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம்
- இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய்
- வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய்
- வருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே." (யாப்பருங்கலக்காரிகை 19-வது செய்யுள்)
சீர்களின் அமைப்பு
தொகுசெய்யுளின் அடியில் ஈற்றுச்சீரைத்தவிர 1, 2 மற்றும் 3 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெரின் கூழைத்தொடை விகற்பம் எனப்படும்.
தொடை விகற்ப வகைகள்
தொகுபின்வரும் 5 வகைகளில் இவ்விகற்பம் அமையும்:
- கூழை மோனைத் தொடை
- கூழை இயைபுத்தொடை
- கூழை எதுகைத்தொடை
- கூழை முரண் தொடை
- கூழை அளபெடைத்தொடை
எடுத்துக்காட்டுகள்
தொகு"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை" (411-வது திருக்குறள், பொருட்பால், அரசியல், கேள்வி)
மேற்கண்ட குறளில் முதலடியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் சீர்கள் "செ" என்று தொடங்குகின்றன. எனவே இச்செய்யுள் கூழை மோனைத்தொடை வகையை பின்பற்றுகிறது எனலாம்.