கூழைக்கடா மலர்
அரிஸ்ட்டோலோக்கியா கிரான்டிபுளோரா அல்லது கூழைக்கடா மலர் (Aristolochia grandiflora/pelican flower) என்பது ஒரு இலையுதிர் கொடி ஆகும். உலகிலேயே மிகப்பெரிய பூக்களைக்கொண்ட தாவரங்களுள் இதுவும் ஒன்று. அழுகின இறைச்சியைப் போன்ற மணத்தை வெளிப்படுத்தி, இப்பூக்கள் ஈக்களை ஈர்க்கின்றன.
வகைப்பாடு
தொகு- தாவரவியல் பெயர் : அரிஸ்டோலோக்கியா கிராண்டிபுளோரா Aristolochia grandiflora
- குடும்பம் : அரிஸ்டோலோக்கேசியீ (Aristolochacea)
- இதர பெயர்கள்: பெலிக்கன் மலர் (Pelican Flower); வாத்து மலர் (Swan Flower)
செடியின் அமைவு
தொகுபடர்ந்து வளரும் இக்கொடியின் இலை இதய வடிவத்தில் இருக்கும். இக்கொடியின் பூ பெரியதாக இருக்கும். இந்தப்பூ பறவையின் கழுத்து போல் வளைந்து இருக்கும். பார்ப்பதற்கு கூழைக்கடா பறவை ஓய்வு எடுக்கும் போது எப்படி இருக்குமோ அது போல் உள்ளதால் இதற்கு கூழைக்கடா மலர் என்று பெயர்.
பூவின் அமைவு
தொகுஇப்பூவின் வெளிப்பகுதி அகன்று இதய வடிவத்திலும், வளைந்து விளிம்பு ஊதா சிவப்புடன் கூடிய நரம்புகள் உடையது. இப்பூ 1½ அடி (50 செ.மீ) விட்டமும் 3 அடி நீளத்திற்கு மேல் வாலும் தொங்கிக் கொண்டிருக்கும். ஒரே பூவில் கேசரமும், சூலகமும் இருந்தாலும் சூலகம் முன்னாடி முதிர்ச்சியடைகிறது. பூ இதழ்கள் குழாய் வடிவமானது. இதனுள் ஈட்டி போன்ற முடிகள் கீழ்நோக்கி வளைந்திருக்கும். பூவின் வாசனையால் ஈக்கள் எதிளில் உள்ளே சென்று விடும். ஈக்கள் வெளியே வர முயன்றால் ஈட்டி போன்ற முடி குத்திவிடும். ஆகையால் ஈக்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். இந்தக் காலத்தில் மகரந்தப்பைகள் ஈ மீது ஒட்டிக்கொள்ளும். மகரந்தச் சேர்க்கை முடிந்தவுடன் ஈட்டி முடிகள் வற்றிவிடும். இப்போது ஈ மலரைவிட்டு வெளியேறி வேறொரு பூவுக்குச் செல்லும்.
தாவரத்தில் காணப்படும் வேதிப்பொருள்கள்
தொகுஇத்தாவரமானது நச்சுத்தன்மையையும் புற்றுநோய்க் காரணியைான அரிஸ்டோலோக்கிக் அமிலத்தைக் கொண்டுள்ளதாலும் மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக அறியப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் விவசாயத் துறை இச்சேர்மத்தைக் கொண்டுள்ள அனைத்து விளைபொருள்களையும் தடை செய்துள்ளது.[1] அரிஸ்டோலோசியா கிராண்டிஃப்ளோரொ (பிஸ்பென்சைல்ஐசோகுயினோலினிக் மற்றும் 8-பென்சைல்பெர்பெரினிக் போன்ற பல்வேறு ஆல்கலாய்டுகளைக் கொண்டுள்ளது.[2] இந்த ஆல்கலாய்டுகள் பூச்சிகள் மற்றும் தாவர நுண்ணுயிரிகளுக்கு எதிரான பாதுகாப்பினை இத்தாவரத்திற்குத் தருகிறது.[3]
காணப்படும் பகுதிகள்
தொகுஇச்செடிகள் தென் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் அதிகம் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Heinrich, M; Chan, J; Wanke, S; Neinhuis, C; Simmonds, MS (Aug 17, 2009). "Local uses of Aristolochia species and content of nephrotoxic aristolochic acid 1 and 2--a global assessment based on bibliographic sources.". Journal of Ethnopharmacology 125 (1): 108–44. doi:10.1016/j.jep.2009.05.028. பப்மெட்:19505558.
- ↑ Holzbach, Juliana C.; Lopes, Lucia M. X. (21 December 2010). "Aristolactams and Alkamides of Aristolochia gigantea". Molecules 15 (12): 9462–9472. doi:10.3390/molecules15129462. பப்மெட்:21178901.
- ↑ Maiti, M.; G. S. Kumar (27 September 2007). "Molecular aspects on the interaction of protoberberine, benzophenanthridine, and aristolochia group of alkaloids with nucleic acid structures and biological perspectives". Medicinal Research Reviews 27 (5): 649–95. doi:10.1002/med.20087. பப்மெட்:16894530.
வெளியிணைப்புகள்
தொகு- Aristolochia grandiflora, profile at USDA
- Aristolochia grandiflora (pelican flower), Kew Gardens