கெஆபொ-5 (KOI-5) என்பது மூவிண்மீன்களைக் கொண்ட மும்மை விண்மீன் அமைப்பாகும். இந்த அமைப்பைக் கெஆபொ-5 A, கெஆபொ-5 B, கெஆபொ-5 C, ஆகிய விண்மீன்கள் 1,870 ±70 ஒளி ஆண்டுகள் தொலைவில் சுற்றி வருகின்றன.

கெஆபொ-5A விண்மீனுக்கு இரண்டு மங்கலான விண்மீன் இணைகள் 2016 இல் கண்டுபிடிக்கப்பட்டன. கெஆபொ-5 A, கெஆபொ- B ஒன்றையொன்று 29 ஆண்டுகள் வட்டணை அலைவுநேரத்தில் சுற்றுகின்றன, மேலும் கெஆபொ-5 C ஒவ்வொரு 400 ஆண்டுகள் வட்டணை அலைவுநேரத்தில் A, Bஆகிய விண்மீன்களைச் சுற்றி வருகிறது. [1] KOI-5C நிகழ்தகவு 99.98% உடன் முதன்மை விண்மீன் இணையுடன் புறநிலையாக தொடர்புடையது. [2]

கோள் அமைப்பு

தொகு

KOI-5 இன் நட்சத்திரங்களில் ஒன்றைச் சுற்றி வரும் இரண்டு கோள்கள் கெப்ளர் தரவுகளின் அடிப்படையில் 2009 முதல் கருதப்பட்டன, ஆனால் கெஆபொ-5Ab கோள் KOI-5A விண்மீனைச் சுற்றி வருவதை TESS தீர்மானித்த பிறகு ஜனவரி 2021 இல் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தப் புறக்கோள் கண்டுபிடிப்பு சமூகத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியது, ஏனெனில், இதன் வட்டணைத்தளம் நெருங்கிய விண்மீனுடன் மையப்பிறழ்வுடன் இருந்தது தான். இது கெஆபொ-5Ab ஐ அதன் வளர்ச்சியின்போது ஈர்ப்பு உதைப்பை வழங்கியது, இதன் விளைவாக தற்போதைய வட்டணையில் மையம்பிறழ்ந்து உள்நோக்கி இடம்பெயர்ந்தது. [1] [3] இருப்பினும், இந்தக் கோளின் உறுதிப்படுத்தல் இதுவரை எந்த இணை மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழிலும் வெளியிடப்படவில்லை.

இரண்டாவது கோள் ஒன்றும் தொடக்கத்தில் இருப்பதாக கருதப்பட்டு, ஆனால் பின்னர் பிழையானது என்று கண்டறியப்பட்டது.

KOI-5A தொகுதி[2][1][4]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(day)
வட்டவிலகல்
b 0.179 MJ 0.0596060 5 ?

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 AT LAST!
  2. 2.0 2.1 Hirsch, Lea A.; Ciardi, David R.; Howard, Andrew W.; Everett, Mark E.; Furlan, Elise; Saylors, Mindy; Horch, Elliott P.; Howell, Steve B.; Teske, Johanna (2017), "Assessing the Effect of Stellar Companions from High-resolution Imaging of Kepler Objects of Interest", The Astronomical Journal, p. 117, arXiv:1701.06577, Bibcode:2017AJ....153..117H, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/153/3/117 {{citation}}: Missing or empty |url= (help)
  3. Chen, Rick (2021-01-11). "Planetary Sleuthing Finds Triple-Star World". பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
  4. "Exoplanet Archive". exoplanetarchive.ipac.caltech.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-07-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெஆபொ-5&oldid=3836650" இலிருந்து மீள்விக்கப்பட்டது