கெடுலான் கோவில்

இந்தோனேஷியாவில் உள்ள இந்துக் கோவில்

கேதுலன் கோயில் (Kedulan temple) (இந்தோனேசிய மொழி: Candi Kedulan) என்பது சாம்பிசரி கோயிலிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்துக் கோயிலின் இடிபாடு ஆகும். இக்கோயில் இந்தோனேஷியாவில் யோக்யகர்த்தாவில்ஸ்லீமன் ரீஜன்சியில் உள்ள கலாசன் துணை மாவட்டத்தில் உள்ள தீர்த்தோமார்த்தனி என்னும் கிராமத்தில் உள்ளது. இதன் பாணியும் கட்டிடக்கலையும் அருகிலுள்ள சாம்பிசரி கோயிலின் பாணியுடன் ஒத்த நிலையில் உள்ளது. சாம்பிசாரியைப் போலவே, கோயில் வளாகமும் தற்போதைய மேற்பரப்பில் இருந்து கீழே 6 மீட்டர் புதைந்த அளவில் உள்ளது.வடக்கில் உள்ள மெராபி மலையின் கடந்தகால வெடிப்பின் லஹார் ஓட்டத்தின் விளைவாக இந்த நிலையில் அது உள்ளது. [1]

கேதுலன் கோயில்
கேதுலன் கோயிலின் இடிபாடு
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஇந்து
நகரம்யோக்யகர்த்தா அருகில், யோக்யகர்த்தா
நாடுஇந்தோனேசியா
நிறைவுற்றதுசி.9ஆம் நூற்றாண்டு
கட்டுவித்தவர்சைலேந்திர அல்லது மதாரம் ராச்சியம்

கோயில் வளாகம் கல் சுவர்களில் மூடப்பட்ட நிலையில் உள்ளது. அதன் பாகங்கள் இன்னும் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளன. உள்ளே அடைப்புக்குள், நான்கு கோயில்கள் உள்ளன. கிழக்கு நோக்கிய நிலையில் ஒரு முதன்மைக் கோயில் உள்ளது. மற்ற மூன்று சிறிய துணை கோயில்கள் (பெர்வாரா கோயில்கள்) கிழக்கு திசையில் முதன்மைக் கோயிலுக்கு முன்னால் வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கிய நிலையில் வரிசையில் உள்ளன. இதன் கட்டடப்பாணியும் அமைப்பும் சாம்பிசரி கோயிலை ஒத்த நிலையில் காணப்படுகிறது. இருப்பினும் சாம்பிசரி கோயில் மேற்கு நோக்கிய நிலையில், தென்மேற்கில் சுமார் 2.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

1993 நவம்பர் 24 ஆம் நாளன்று, எரிமலை மணல் சுரங்கத் தொழிலாளர்கள் குழு நிலத்தை குவாரி செய்தபோது, இதன் முதன்மைக்கோயில் எதிர்பாராத விதமாக தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலம் கிராமத்திற்கு சொந்தமானது ஆகும். இதனைத் தொடர்ந்து பிபி 3 யோககர்த்தா தலைமையில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியினர் அகழாய்வுப் பணியை மேற்கொண்டனர். அப்போது 6 முதல் 7 மீட்டர் ஆழத்தில் கோயிலின் முதன்மைக் கட்டிடத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கோயிலின் தரைத் தளம் ஒவ்வொரு பக்கத்திலும் 13.7 மீட்டர் அளவைக் கொண்ட ஒரு சதுரத்தில் அமைந்துள்ளது. முதன்மைக் கட்டிடத்தின் உயரம் 8.009 மீட்டர் உயரம் ஆகும். [1] தற்போது, கோயில் பழுதடைந்துள்ளது; கோயிலின் சில பகுதிகள் இன்னும் புதைக்கப்பட்டுள்ளன, சில கற்கள் காணவில்லை.

2017 ஆம் ஆண்டு வரை தொல்பொருள் ஆய்வு மற்றும் புனரமைப்பு திட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கோயில் புனரமைப்பு கட்டம் அனஸ்டைலோசிஸ் நிலையில் தொடர்ந்தது. கேதுலன் கோயில் வளாகத்தின் முழுமையான மறுசீரமைப்பு 2018 இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. [2]

அண்மைக் கண்டுபிடிப்பு

தொகு

அண்மையில் தென் பகுதியில் காணப்படுகின்ற பெர்வாரா கோயில் எனப்படுகின்ற துணைக்கோயில் முழுமையாக அகழாய்வு செய்யப்பட்டது. அந்த பெர்வாரா கோயில் தரையின் கீழ்ப் பகுதியில் 4 மீட்டரில் இருந்தது. இந்தப் பெர்வாரா கோயிலின் அமைப்பானது ஜலான் பாங்க் என்னுமிடத்திற்கு அடியில் இருந்ததாகும். அதே சமயத்தில் அந்த பெர்வாரா கோயிலின் மீதிப் பகுதியினை அகழாய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அத்தகைய அகழ்வாராய்ச்சியின்போது சில பாறைப் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வடக்குப் பகுதியில் உள்ள பெர்வாரா கோயிலில் இன்னும் அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்படவில்லை. அகழாய்வுப் பணியின்போது அகத்தியர் சிலையின் அருகில் இரு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை சமஸ்கிருத மொழியில் உள்ளன. [3]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Indonesia, Perpustakaan Nasional Republik Indonesia / National Library of. "Candi Kedulan (Yogyakarta) - Kepustakaan Candi". candi.perpusnas.go.id (in இந்தோனேஷியன்). Archived from the original on 2017-12-05. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.
  2. Ajie, Stefanus (17 February 2018). "Kedulan Temple restoration enters anastylosis phase" (in en). The Jakarta Post. http://www.thejakartapost.com/life/2018/02/15/kedulan-temple-restoration-enters-anastylosis-phase.html. 
  3. "Kedulan Temple". Archived from the original on 2019-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெடுலான்_கோவில்&oldid=3696827" இலிருந்து மீள்விக்கப்பட்டது