கெனான் இஓஎஸ் 5டி

கெனான் இஓஎஸ் 5டி (ஆங்கிலம்:Cannon EOS 5D) 12.8 மாபடவணு உடைய எண்ணிம தனிவில்லை பிரதிபலிப்பு (DSLR) படமி ஆகும். இப்படமியை கெனான் நிறுவனம், 22, ஆகத்து, 2005 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிட்டது.[1] அன்றைய நாளில், இதன் விலை இஓஎஸ் 20 படமியை விட அதிகமாகவும், இஓஎஸ் 1டி மார்க் II படமி வரிசையை விட குறைவாகவும் இருந்தது. இப்படமியிலுள்ள (EF="Electro-Focus") வில்லைச் சட்டத்தின், பிற வில்லைகளையும் ஏற்கக்கூடிய வகையில் அமைந்திருந்தது.

கெனான் இஓஎஸ் 5டி
வகைDSLR
பட உணர்வு35.8 x 23.9 மி. மீ. CMOS
கூடிய படப்பிரிதிறன்4,368 × 2,912 (12.8படவணுக்கள்)
வில்லைஇடைமாற்றக்கூடிய கெனான் இஎப் வில்லை சட்டம்
திரைமின்னணு குவியத் தளம்
திரை வேக அளவு30 முதல் 1/8000 நொடி + Bulb
Exposure meteringTTL, முழுத்துளை, 35 பகுதிகள்
Exposure modesமுழுத் தானியக்கம், திட்டப்படி, முன்னுரிமைத் திரைப்படல் , துளைமுன்னுரிமை, கைமுறை
Metering modesமதிப்பீடு, ஒரு பகுதி, Spot, C/Wgt நடுத்தரம்
குவிமையம் இடங்கள்9 பயனர் புள்ளிகள் + 6 துணைப்புள்ளிகள்
குவிய முறைகள்One-shot, AI Servo, AI-Focus, கைமுறை
தொடர் படப்பிடிப்பு3 படங்கள்/நொடி
கண்கருவிகண்மட்ட ஐங்கண்ணாடி ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி, 95% தழுவு அளவு, 0.87× உருப்பெருக்கம்
ஐஎஸ்ஓ பரப்பெல்லைISO 50-3200
வெள்ளைச் சமநிலை வளைப்பு±3 நிறுத்தம் 1-நிறுத்த அதிகரிப்பில்
பின் திரை2.5 அங்குலம் (63 மி. மீ.), 230,000 படவணுக்கள்
சேமிப்பு நினைவகம்SDSC
SDHC
உலர் மின்கலம்Li-Ion BP-511மின்னேற்றம் செய்யலாம்
நிறை810 கிராம்கள் ( உடற்பகுதி மட்டும்)
Optional battery packsBP-511A, BP-514, BP-511, BP-512.
BG-E4 மின்கலப்புள்ளி AA மின்கலங்களையும் பயன்படுத்தலாம்
தயாரிப்புஜப்பான்

இப்படமியின் இரண்டாம் கட்ட வளர்ச்சியாக, 17 செப்டம்பர் 2008 ஆம் ஆண்டு, கெனான் இஓஅஸ் 5டி மார்க்II என்ற படமியை, கெனான் நிறுவனம் வெளியிட்டது.[2]

இதனையும் அடுத்து, மூன்றாம் கட்ட வளர்ச்சியாக, 2 மார்ச்சு 2012 ஆம் ஆண்டில், கெனான் இஓஎஸ் 5டி மார்க்III (Canon EOS 5D Mark III) என்ற படமி வெளிவந்தது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. Canon(22 August 2005). "NEW CANON EOS 5D IS A PREMIUM DIGITAL SLR AT AN AFFORDABLE...". செய்திக் குறிப்பு.
  2. Canon(17 செப்டம்பர் 2008). "CANON U.S.A. INTRODUCES THE HIGHLY ANTICIPATED EOS 5D MARK II DSLR...". செய்திக் குறிப்பு.
  3. Canon(2 March 2012). "Canon U.S.A. Announces the Highly Anticipated EOS 5D Mark III Digital SLR Camera". செய்திக் குறிப்பு.

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெனான்_இஓஎஸ்_5டி&oldid=3582563" இலிருந்து மீள்விக்கப்பட்டது