கென்னத் கவுண்டா

கென்னத் கவுண்டா (Kenneth David Kaunda, 28 ஏப்ரல் 1924 – 17 சூன் 2021),[3][4] சாம்பியாவின் அரசியல்வாதி ஆவார். இவர் அந்நாட்டின் முதலாவது அரசுத்தலைவராக 1964 முதல் 1991 வரை பதவியில் இருந்தார். பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தில் முன்னணிப் பங்கு வகித்தவர். சாம்பிய ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரசுத் தலைவர் ஹரி இங்கும்புலாவுடன் முரண்பட்டு, அக்கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசிய விடுதலைக் கட்சியை ஆரம்பித்தார். விடுதலை பெற்ற சாம்பியாவின் முதலாவது தலைவரும் இவரே.

கென்னத் கவுண்டா
Kenneth Kaunda
1983 இல் கவுண்டா
சாம்பியாவின் 1-வது அரசுத்தலைவர்
பதவியில்
24 அக்டோபர் 1964 – 2 நவம்பர் 1991
முன்னவர் எவெலின் டெனிசன் கோன் (வடக்கு உரொடீசிய ஆளுநர்)
பின்வந்தவர் பிரெடிரிக் சிலுபா
அணிசாரா இயக்கத்தின் 3-வது செயலாளர்-நாயகம்
பதவியில்
8 செப்டம்பர் 1970 – 5 செப்டம்பர் 1973
முன்னவர் ஜமால் அப்துல் நாசிர்
பின்வந்தவர் ஒவாரி பௌமெடியன்
தனிநபர் தகவல்
பிறப்பு கென்னத் தாவீது கவுண்டா
(1924-04-28)28 ஏப்ரல் 1924

[1]
சின்சாலி, சாம்பியா[2]

இறப்பு 17 சூன் 2021(2021-06-17) (அகவை 97)
லுசாக்கா, சாம்பியா
அரசியல் கட்சி ஐக்கிய தேசிய விடுதலைக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பெட்டி கவுண்டா (1946-2012, இறப்பு வரை)
பிள்ளைகள் 8
தொழில் ஆசிரியர்

இசுக்காட்லாந்துத் திருச்சபையால் புனிதப்பணியில் சார்த்தப்பட்ட சமயப் பரப்பாளருக்கு பிறந்த எட்டு குழந்தைகளில் ஒருவராவார். இவரும் தமது தந்தையின் வழியிலேயே ஆசிரியராக உருவானார்.

1968ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய தேசிய விடுதலைக் கட்சியைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்தார். அதே நேரம் முக்கிய பன்னாட்டு நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை அரசுடமையாக்கினார். 1973ஆம் ஆண்டில் நேர்ந்த எண்ணெய் நெருக்கடியும் ஏற்றுமதி இறக்கமும் சாம்பியாவின் பொருளாதாரத்தை நெருக்கடியில் ஆழ்த்தியது. இதனால் தாமியற்றிய விதிகளை மாற்ற கவுண்டாவிற்கு பன்னாட்டு அழுத்தம் எழுந்தது. 1991இல் பல-கட்சி தேர்தல்கள் நடந்தன; இதில் பல-கட்சி மக்களாட்சிக்கான இயக்கத்தின் தலைவர் பிரெடிரெக் சிலுபா கவுண்டாவை தோற்கடித்தார். 1999இல் இவரது சாம்பியக் குடியுரிமை விலக்கிக் கொள்ளப்பட்டது; ஆனால் அடுத்த ஆண்டே இந்த முடிவு திரும்பப் பெறபட்டது.

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்னத்_கவுண்டா&oldid=3179894" இருந்து மீள்விக்கப்பட்டது