கென் பர்ன்ஸ்
கென்னத் லாரன் பர்ன்ஸ் [1] (Kenneth Lauren Burns பிறப்பு 1953) ஓர் அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். ஆவணப்படங்களில் காப்பக காட்சிகளையும் புகைப்படங்களையும் பயன்படுத்தும் பாணியால் பரவலாக இவர் அறியப்பட்டார். அவரது பரவலாக அறியப்பட்ட ஆவணத் தொடர்களில் தி சிவில் வார் (1990), பேஸ்பால் (1994), ஜாஸ் (2001), தி வார் (2007), தி நேஷனல் பார்க்ஸ்: அமெரிக்காஸ் பெஸ்ட் ஐடியா (2009), புராஹிபிசன் (2011), தி ரூஸ்வெல்ட்ஸ் (2014), வியட்நாம் வார் (2017), மற்றும் கண்ட்ரி மியூசிக் (2019) ஆகிய குரிப்பிடத்தகுந்தன ஆகும். தி வெஸ்ட் (1996, ஸ்டீபன் இவ்ஸ் இயக்கியது), மற்றும் கேன்சர்: தி எம்பெரர் ஆஃப் ஆல் மாலடீஸ் (2015, பராக் குட்மேன் இயக்கியது) ஆகிய இரண்டின் நிர்வாக தயாரிப்பாளராகவும் இருந்தார்.
பர்ன்ஸ் ஆவணப்படங்கள் இரண்டு அகாதமி விருதுக்கான பரிந்துரைகளைப் பெற்றுள்ளன.1981 ஆம் ஆன்டில் புரூக்ளின் பிரிட்ஜ்கிற்கு முதலாவது பரிந்துரையினையும் 1985 ஆம் ஆண்டில் வெளியான தி ஸ்டேச்சு ஆஃப் லிபர்ட்டிக்கு இரண்டாவது பரிந்துரையினையும் பெற்றார்.[2][3] மற்றும் பல எம்மி விருதுகளையும் வென்றுள்ளார் .[4]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுபர்ன்ஸ் ஜூலை 29, 1953 இல்,[1] நியூயார்க்கின் புரூக்ளினில், லைலா ஸ்மித் (நீ டப்பர்) பர்ன்ஸ்,[5] மற்றும் ராபர்ட் கைல் பர்ன்ஸ் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். மன்ஹாட்டனில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கலாச்சார மானுடவியல் பிரிவில் கல்வி பயின்றார் . ஆவணப்படம் தயாரிப்பாளரான ரிக் பர்ன்ஸ் இவரது தம்பி ஆவார்.[6][7]
இவரது தந்தை மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கற்பித்தார்.[8] பர்ன்ஸ் மூன்று வயதில் இருந்த போது இவரின் தாய்க்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவருக்கு பதினொரு வயதாக இருந்த போது அவர் இறந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு1982 இல், பர்ன்ஸ் ஆமி ஸ்டெக்லர் என்பவரை மணந்தார். இந்தத் தம்பதியருக்கு சாரா மற்றும் லில்லி என்ற இரண்டு மகள்கள் இருந்தனர்.[9][10] இந்தத் தமபதி 1993 ஆம் ஆண்டில் திருமண முறிவு பெற்றனர்.
2017 இல் பர்ன்ஸ் நியூ ஹாம்ப்ஷயரின் வால்போலில் அவரது இரண்டாவது மனைவி ஜூலி டெபோரா பிரவுனுடன் வசித்து வந்தார் அவரை அக்டோபர் 18, 2003 இல் பர்ன்ஸ் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒலிவியா மற்றும் வில்லா பர்ன்ஸ் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
தெ சிவில் வாருக்கு 40 க்கும் மேற்பட்ட திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விருதுகள் கிடைத்தன. இதில் இரண்டு எம்மி விருதுகள், இரண்டு கிராமி விருதுகள் ( சிறந்த பாரம்பரிய நாட்டுப்புற பாடல் தொகுதிக்கானது), புரொடீயூசர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்காவின் ஆண்டின் சிறந்த தயாரிப்பாளர் விருது,பீபிள் சாய்ஸ் விருது, ஒரு பீபோடி விருது, டுபோன்ட்-கொலம்பியா விருது, டி. டபிள்யூ. கிரிஃபித் விருது மற்றும் $ 50,000க்கான லிங்கன் பரிசு .[11][12][13]
தொழில் வாழ்க்கை
தொகுபேஸ்பால் (1994), ஜாஸ் (2001), தி வார் (2007), தி நேஷனல் பார்க்ஸ்: அமெரிக்காஸ் பெஸ்ட் ஐடியா (2009), புராஹிபிசன் (2011), தி ரூஸ்வெல்ட்ஸ் (2014), வியட்நாம் வார் (2017), மற்றும் கண்ட்ரி மியூசிக் (2019) ஆகிய குரிப்பிடத்தகுந்தன ஆகும். தி வெஸ்ட் (1996, ஸ்டீபன் இவ்ஸ் இயக்கியது), மற்றும் கேன்சர்: தி எம்பெரர் ஆஃப் ஆல் மாலடீஸ் (2015, பராக் குட்மேன் இயக்கியது) ஆகிய இரண்டின் நிர்வாக தயாரிப்பாளராகவும் இருந்தார்.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Ken Burns Biography (1953–)". Filmreference.com. பார்க்கப்பட்ட நாள் August 19, 2011.
- ↑ "Documentary Winners: 1982 Oscars". யூடியூப். பார்க்கப்பட்ட நாள் August 13, 2019m.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Broken Rainbow Wins Documentary Feature: 1986 Oscars". யூடியூப். பார்க்கப்பட்ட நாள் August 13, 2019.
- ↑ "About the filmmakers". Pbs.org. Archived from the original on ஜூலை 15, 2017. பார்க்கப்பட்ட நாள் July 12, 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Ken Burns". Encyclopedia of World Biography via BookRags.com. n.d.
- ↑ "Ken Burns". biography at FlorentineFilms.com. n.d. Archived from the original on May 17, 2016.
- ↑ "PUBLIC LIVES; No Civil War, but a Brotherly Indifference". November 17, 1999. https://www.nytimes.com/1999/11/17/nyregion/public-lives-no-civil-war-but-a-brotherly-indifference.html. பார்த்த நாள்: November 4, 2016.
- ↑ Walsh, Joan (n.d.). "Good Eye: The Interview With Ken Burns". San Francisco Focus. KQED via Online-Communicator.com. Archived from the original on September 22, 2011.
- ↑ "Lilly Burns". IMDb.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-09.
- ↑ Edgerton, Gary (n.d.). "Burns, Ken: U.S. Documentary Film Maker". The Museum of Broadcast Communications. Archived from the original on June 29, 2011.
- ↑ The Civil War, பார்க்கப்பட்ட நாள் September 19, 2017
- ↑ "Nonesuch Records The Civil War [Soundtrack]". Nonesuch.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் September 19, 2017.
- ↑ "About the Series | The Civil War | PBS". Pbs.org. பார்க்கப்பட்ட நாள் September 19, 2017.