கெப்லர்-90 (Kepler-90) என்பது புவியிலிருந்து 2,545 ஒளி ஆண்டுகள் தொலைவில் நீண்ட அரவ விண்மீன் குழாமில் காணப்படும் ஒரு விண்மீன் ஆகும். இது சூரியக் குடும்பத்தைப் போன்றே சமமான எண்ணிக்கையிலான கோள்களைக் கொண்டுள்ளமைக்காக குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

கெப்லர்-90

கெப்லர்-90 பல்கோள் தொகுதியும் அதன் உட்சூரியக் குடும்பத்தொகுதியும் ஒரு ஒப்பீடு (14 டிசம்பர் 2017).
நோக்கல் தரவுகள்
ஊழி 2000      Equinox 2000
பேரடை டிரேக்கோ
வல எழுச்சிக் கோணம் 18h 57m 44.038s[1]
நடுவரை விலக்கம் +49° 18′ 18.58″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)14
இயல்புகள்
விண்மீன் வகைG0V
வான்பொருளியக்க அளவியல்
தூரம்2545[2] ஒஆ
(780[2] பார்செக்)
தனி ஒளி அளவு (MV)-0.5
விவரங்கள்
திணிவு1.2 ± 0.1[2] M
ஆரம்1.2 ± 0.1[2] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.4[2]
வெப்பநிலை6080+260
−170
[2] கெ
சுழற்சி வேகம் (v sin i)4.6 ± 2.1[2] கிமீ/செ
அகவை~2 பில்.ஆ
வேறு பெயர்கள்
KIC 11442793, KOI-351
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

2017 டிசம்பர் 14 இல் நாசா மற்றும் கூகுள் ஆகியவை இணைந்து கெப்லர் 90 விண்வெளிக் குழுமத்தில் கெப்லர்-90ஐ என்ற எட்டாவது கோள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து அறிவித்தன: இந்த கண்டுபிடிப்பானது கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய முறை செயற்கை நுண்ணறிவு இயந்திர கற்றலைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்டுள்ளது.[3][4][5]

பெயரிடு முறை மற்றும் வரலாறு தொகு

கெப்லர் திட்டத்தின் போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய உற்றுநோக்கலுக்கு முன்னதாக கெப்லர்-90, 2 மைக்ரான் அனைத்து வான் கணக்கெடுப்பு (2MASS) தொகு பதிவு எண்ணாக J18574403+4918185 ஐக் கொண்டிருந்தது. இது கெப்லர் உள்ளீட்டு தொகுபதிவு எண்ணாக கேஐசி 11442793 என்பதையும், கெப்லர் விண்கலத்தால் உற்றுநோக்கப்படும் நட்சத்திரக் கூட்டத்தில் கேஓஐ-351 என்ற எண்ணையும் கொண்டுள்ளது. விண்மீன் குழுவின் தோழமை கிரகங்கள் நாசாவின் கெப்லர் பணித்திட்டத்தால் நட்சத்திரங்களுக்கு இடையிலான நகர்வின் காரணமாக கோள்கள் கண்டறியப்பட்டன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Cutri, R. M. (2003). "2MASS All-Sky Catalog of Point Sources". VizieR On-line Data Catalog. Bibcode: 2003yCat.2246....0C. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Kepler-90". NASA Exoplanet Archive. பார்க்கப்பட்ட நாள் July 16, 2016.
  3. Shallue, Christopher J.; Vanderburg, Andrew (16 December 2017). "Identifying Exoplanets With Deep Learning: A Five Planet Resonant Chain Around Kepler-80 And An Eighth Planet Around Kepler-90" (பி.டி.எவ் preprint). பார்க்கப்பட்ட நாள் 14 December 2017 – via Harvard–Smithsonian Center for Astrophysics.
  4. Chou, Felecia; Hawkes, Alison; Northon, Karen (14 December 2017). "Release 17-098 - Artificial Intelligence, NASA Data Used to Discover Eighth Planet Circling Distant Star". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா). பார்க்கப்பட்ட நாள் 14 December 2017.
  5. Chou, Felicia; Hawkes, Alison; Landau, Elizabeth (14 December 2017). "Artificial Intelligence, NASA Data Used to Discover Eighth Planet Circling Distant Star". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா). பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்-90&oldid=2749385" இலிருந்து மீள்விக்கப்பட்டது