கெர்ஃகாத் சுரோடர்
கெர்ஃகாத் பிரிட்சு குர்த் சுரோடர் (Gerhard Fritz Kurt Schröder) (பி:7 ஏப்ரல் 1944) 1998ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை செருமனியின் சான்சுலர் அல்லது வேந்தராக பொறுப்பேற்றிருந்த ஓர் செருமானிய அரசியல்வாதி ஆவார். சோசலிச மக்களாட்சிக் கட்சியைச் சேரந்த இவர் பசுமைகள் எனப்படும் கட்சியினருடன் கூட்டணி அமைத்து அரசு அமைத்தார்.அரசியலுக்கு வருவதற்கு முன்னர் வழக்கறிஞராக இருந்தார்.1990-1998ஆம் ஆண்டுகளில் கீழ் சக்சனிக்கு பிரமராக பணியாற்றினார்.2005ஆம் ஆண்டுத் தேர்தல்களில் இவரது கட்சியின் தோல்வியை அடுத்து மூன்று வாரங்கள் கூட்டணி அமைக்க முயன்று தோல்வியுற்றமையால் எதிர்கட்சியான கிருத்துவ மக்களாட்சி சங்கத்தின் ஏங்கலா மெர்கலுக்கு வேந்தராக பதவியேற்க வழிவிட்டார்.தற்போது உருசியாவிலிருந்து செருமனிக்கு தரையடி எரிவாயு குழாய் அமைக்கும் நார்ட் இசுட்ரீம் நிறுவனத்தின் வணிகவாரியத் தலைவராக உள்ளார்.
கெர்ஃகாத் சுரோடர் | |
---|---|
செருமனியின் சான்சுலர் | |
பதவியில் 27 அக்டோபர் 1998 – 22 நவம்பர் 2005 | |
குடியரசுத் தலைவர் | ரோமன் ஹெர்சோக் யோன்னசு ராவ் ஹோர்சு கோலர் |
Deputy | யோசுகா பிஷர் |
முன்னையவர் | எல்மெட் கோல் |
பின்னவர் | ஏங்கலா மெர்கல் |
செருமன் சோசலிச மக்களாட்சிக் கட்சியின் அவைத்தலைவர் | |
பதவியில் 12 மார்ச்சு 1999 – 21 மார்ச்சு 2004 | |
முன்னையவர் | ஓசுகர் லாபோன்டைன் |
பின்னவர் | பிரான்சு முன்டெஃபெர்ரிங் |
கீழ் சக்சனியின் பிரதமர் | |
பதவியில் 21 சூன் 1990 – 27 அக்டோபர் 1998 | |
முன்னையவர் | எர்னசுட் அல்பிரெக்ட் |
பின்னவர் | கெர்காத் குளோகௌசுகி |
செருமனி சட்ட மேலவைத் தலைவர் (President of the German Bundesrat) | |
பதவியில் 1997–1998 | |
முன்னையவர் | எர்வின் டௌஃபெல் |
பின்னவர் | ஹான் ஐசேல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 ஏப்ரல் 1944 மோசன்பெர்க்-வோரென், செருமனி |
அரசியல் கட்சி | சோசலிச மக்களாட்சிக் கட்சி |
துணைவர்(கள்) | ஈவா சுபாக் (1968–1972) ஆன் டாசுமேகர் (1972–1984) இல்துருட் அம்பல் (1984–1997) டோரிசு சுரோடர்-கோஃப் (1997–நடப்பு) |
முன்னாள் கல்லூரி | கோட்டிங்கென் பல்கலைக்கழகம் |
தொழில் | வழக்கறிஞர் |
சமயம் | செருமனியின் இவாலாஞ்சிகல் சர்ச்[1] |
கையெழுத்து | |
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- Gerhard Schröder's presence on facebook
- (செருமன் மொழி) Pictures "Spuren der Macht" பரணிடப்பட்டது 2007-12-27 at the வந்தவழி இயந்திரம்
- From Ironmonger's Apprentice to Chancellor, Deutsche Welle, July 2005
- Profile: Gerhard Schroeder, BBC News, July 2005
- The Modern Chancellor: Taking Stock of Gerhard Schröder, Der Spiegel Online, October 2005