கெலிக்ஸ் நியுகுலா

கெலிக்சு நியுகுலா
கெலிக்சு நியுகுலாவின் ஓடு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுடைலமெட்டோபோரா
குடும்பம்:
கெலிசிடே
பேரினம்:
கெலிக்சு
இனம்:
கெ. நியுகுலா
இருசொற் பெயரீடு
கெலிக்சு நியுகுலா
மெளவுசன், 1854

கெலிக்சு நியுகுலா (Helix nucula) என்பது காற்றில் சுவாசிக்கும் நிலத்தில் வாழும் வயிற்றுக்காலி மெல்லுடலியாகும். இது கெலிசிடே குடும்பத்தினைச் சார்ந்தது. நத்தையிலார் ஈ. நியூபெர்ட்டின் கூற்றுப்படி, இந்த சிற்றினத்தினை வகைப்படுத்தல் மிகவும் சிக்கலானது. இந்தச் சிற்றினம் கெலிக்சு பிகுலினா சிற்றினத்துடன் ஒத்திருப்பதால் தவறுதலாக அடையாளம் காண வாய்ப்புள்ளது.[1]

பரவல்

தொகு

கெ. நியுகுலா நில நத்தை முக்கியமாகத் துருக்கியின் தெற்கு மற்றும் மேற்கு கடற்கரைகள் மற்றும் கிரேக்கத்தின் ஏஜியன் தீவுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வாழ்கிறது.[2] [3] இவை பெரும்பாலும் துருக்கி மற்றும் கிரேக்கப் பகுதிகளில் மட்டுமே காணப்படுவதாக அறியப்பட்டிருந்தாலும், கிரீட்டின் உள்ளூர் மொழியில் "பார்பராசோஸ் " அல்லது "பெர்பரோஸ் " என்று அழைக்கப்படுவதால் இவை பார்பேரியாவிலிருந்து (வட ஆபிரிக்கா) வந்தவை எனக் கூறலாம். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Neubert E. & Triantis K. (2011). Helix nucula. In: IUCN 2013. IUCN Red List of Threatened Species. Version 2013.1. <www.iucnredlist.org>. Downloaded on 08 July 2013.
  2. IUCN Red List, Distribution map of Helix nucula.
  3. Encyclopedia of Life - Helix nucula
  4. AnimalBase :: Helix nucula
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெலிக்ஸ்_நியுகுலா&oldid=3329333" இலிருந்து மீள்விக்கப்பட்டது