கெலோன்
கெலோன் | |
---|---|
திக்லிப் சாம்பல் மடவை (கெ. லப்ரோசசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | முகிலிடே
|
பேரினம்: | கெலோன் அர்டெடி, 1793[1]
|
மாதிரி இனம் | |
கெலோன் லப்ரோசசு குவியெர், 1829[2] |
கெலோன் (Chelon) என்பது அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் உள்ள கடலோர கடல் நீர், முகத்துவாரங்கள் மற்றும் ஆறுகளில் காணப்படும் மடவை மீன் பேரினமாகும் .
உடற்கூறியல்
தொகுகெலோன் முகிலிபார்ம்சு வரிசையின் பொதுவான நீளமான உடல் மற்றும் முதுகுத் துடுப்புகளைக் கொண்டுள்ள மடவை மீனாகும். முன் துடுப்புகள் நான்கு முதுகெலும்புகள் மற்றும் குத துடுப்புகள் மென்மையான கதிர்களால் ஆனது. இதனுடைய அதிகபட்ச உடல் நீளமானது கேப் வெர்டே மடவை மீனின் உடல் நீளமான 15 செ.மீ. முதல் தடிமனான சாம்பல் மடவை மீனின் நீளமான 32 செ.மீ. வரை மாறுபடும்.[3]
வாழ்விடம்
தொகுஇவை கடலை நோக்கி வலசை போகக்கூடிய மீன்களாகும். அதாவது இவை இனப்பெருக்கக் காலத்தில் ஏரிகள் மற்றும் ஆறுகளிருந்து கடல் பகுதியினை நோக்கி நகருகின்றன. இவை அடிப்படையில் அல்கா மற்றும் இருகலப்பாசிஉண்ணும்.[4]
வகைப்பாட்டியல்
தொகுசமீபத்திய விலங்கின பகுப்பாய்வு, லிசாவைப் பொறுத்தமட்டில் கேலோனை பலபிரிவுகொண்ட பேரினமாக மீட்டெடுத்தது. எனவே லிசா பேரினத்தின் சில சிற்றினங்கள் கெலோனுக்கு மாற்றப்பட்டன மற்றும் லிசா செலோனுக்கு ஒத்ததாக மாற்றப்பட்டது.[5][6]
சிற்றினங்கள்
தொகுபின்வரும் சிற்றினங்கள் கெலோன் பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன:
- கெலோன் ஆரேடா (அ. ரைசோ, 1810) (தங்கச் சாம்பல் மடவை)
- கெலோன் பேண்டியாலென்சிசு டையோப், 1991 (திசாங்கா மடவை)
- கெலோன் பிசுபினோசசு (போடிச், 1825) (கேப் வெர்டே மடவை)
- கெலோன் டுமெரிலி (இசுடெயின்டாக்னர், 1870) (பள்ளம் கொண்ட மடவை)
- கெலோன் லப்ரோசசு (ஏ. ரிஸ்ஸோ, 1827) (திக்லிப் சாம்பல் மடவை)
- கெலோன் பார்சியா (ஆமில்டன், 1822) (தங்கப்புள்ளி மடவை)
- கெலோன் ரமடா (ஏ. ரிஸ்ஸோ, 1827) (தின்லிப் சாம்பல் மடவை)
- கெலோன் ரிச்சர்ட்சோனி (ஏ. சுமித், 1846) (தென் ஆப்பிரிக்க மடவை)
- கெலோன் சேலியன்சு (ஏ. ரிஸ்ஸோ, 1810) (லீப்பிங் மடவை)
- கெலோன் திரைகசுபிடென்சு (ஜெ. எல். பி. சுமித், 1935) (வரி மடவை)