கெவி

இந்தியக் கேலிச் சித்திர ஓவியர்

கெவி (Kevy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல் கேலிச்சித்திர ஓவியக் கலைஞர் ஆவார். கேரளா வர்மா என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார்.

சங்கர் வார இதழில் கேலிச்சித்திரங்களை வெளியிட்டதன் மூலம் கெவி தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் ஈசுட்டர்ன் எகனாமிசுட்டு நிறுவனத்தில் கேலிச்சித்திர ஓவியர் ஆனார். அவசரநிலை நடைமுறை காலத்தில், பிரதமர் இந்திரா காந்தியை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கெவி மேம்போக்காக சிறையில் அடைக்கப்பட்டார். கெவி 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலத்தில் தி நியூ இந்தியன் எக்சுபிரசு பத்திரிகையில் தனது கடைசி கேலிச்சித்திரங்களை வரைந்தார் [1]

கெவி கலையிலிருந்து கேலிச்சித்திரத்தை பிரித்து இதன் வேறுபாட்டை நம்பினார், மேலும் ஒரு கேலிச்சித்திரத்தின் மூலம் ஒரு செய்தியை சொல்ல உதவும் கருவியாகத் தேர்ந்தெடுத்தார் - சித்திரத்தின் தகுதி செய்தி எவ்வளவு திறம்பட தெரிவிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. என்றும் நம்பினார். இவரது தொழில் வாழ்க்கையின் போது இவரது வரையும் பாணி கணிசமாக மாறியது.[2]

கெவி 2010 ஆம் ஆண்டு சூலை மாதம் 23 ஆம் தேதியன்று கொச்சியில் தனது 86 வயதில் இறந்தார் [3]

மேற்கோள்கள் தொகு

  1. "Kevy sketched his last cartoons for Express". The New Indian Express. 24 July 2010.
  2. Khanduri, Ritu Gairola (2014). Caricaturing Culture in India: Cartoons and History in the Modern World. Cambridge University Press. பக். 217–220. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-107-04332-9. https://books.google.com/books?id=lf-GBAAAQBAJ&q=Kevy+&pg=PA217. 
  3. "Cartoonist 'Kevy' is no more". Press Trust of India (ஹிந்துஸ்தான் டைம்ஸ்). 24 July 2010. https://www.hindustantimes.com/india/cartoonist-kevy-is-no-more/story-iGAclWzYAWhh5QS8uf0k7H.html. "Cartoonist 'Kevy' is no more". Press Trust of India. Hindustan Times. 24 July 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவி&oldid=3773094" இலிருந்து மீள்விக்கப்பட்டது