கேசர்பாய் சீர்சாகர்

கேசர்பாய் சீர்சாகர் (Kesharbai Kshirsagar)(1930-2006) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மூன்று முறை மக்களவை உறுப்பினராக இருந்தவரும் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கேசர்பாய் புனே மாவட்டத்தில் உள்ள நிம்கான் மலுங்கி கிராமத்தில் 29 மார்ச் 1930-ல் பிறந்தார் [1]

தொழில் தொகு

சமூகப் பணிகளுக்காக அறியப்பட்ட கேசர்பாய் 1962-ல் ராஜூரி கிராமத்தின் (பீடு) சர்பஞ்சாகவும், 1967-ல் ஊராட்சி மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1972-ல் மகாராட்டிர சட்டமன்றத்தில் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதியாக சௌசலா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

1980ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலின் போது பீடு மக்களவைத் தொகுதியிலிருந்து சசிர்சாகரை தனது அதிகாரப்பூர்வ வேட்பாளராக்கியது இந்தியத் தேசிய காங்கிரசு. இவர் 67,503 வாக்குகள் வித்தியாசத்தில் தனது நெருங்கிய போட்டியாளரைத் தோற்கடித்து, 7வது மக்களவை உறுப்பினரானார் (1980-84).[2] இவர் 1984 மற்றும் 1991 ஆண்டுகளில் மீண்டும் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக அலுவல் மொழிகள் உட்பட பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களில் பணியாற்றினார்.[1] பின்னர் சீர்சாகர் தேசியவாத காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சீர்சாகர் தனது 15 வயதில், கேஷர்பாய் சோனாஜிராவ் சீர்சாகரை மணந்தார்.[1] இவர்களுக்கு 8 குழந்தைகள் இருந்தனர். இவர்களது மகன்களில் ஒருவரான ஜெய்தத் சீர்சாகர் ஆவார்.[4] இவர் அன்புடன் கேசர்காகு என்று அழைக்கப்பட்டார்.[3] சீர்சாகர் 2006-ல் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ மனை ஒன்றில் காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Members Bioprofile: Kshirsagar, Smt. Kesharbai". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 25 November 2017.
  2. "Statistical Reports on the General Elections, 1980 to the Seventh Lok Sabha" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். p. 275. பார்க்கப்பட்ட நாள் 25 November 2017.
  3. 3.0 3.1 United News of India (4 October 2006). "Ex-MP Kesharkaku Kshirsagar passes away". OneIndia.com. பார்க்கப்பட்ட நாள் 25 November 2017.
  4. The New Political Elite. https://books.google.com/books?id=N3yn7-VMxV0C&pg=PA79. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசர்பாய்_சீர்சாகர்&oldid=3743836" இலிருந்து மீள்விக்கப்பட்டது