பீடு
பீடு என்பது இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் மத்திய பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பீடு மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும்.[1]
வரலாறு
தொகுபீடுவின் ஆரம்பக்கால வரலாறு தொல்பொருள் எச்சங்களின் அடிப்படையில் இந்த நகரம் தேவகிரியின் (தௌலதாபாத்) யாதவ ஆட்சியாளர்களால் (1173-1317) நிறுவப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசியர்களால் ஊகிக்கப்படுகின்றது. பீடு பின்னர் பிரித்தானிய இந்தியாவின் நிஜாம்களின் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்தது. 1948 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போலோ நடவடிக்கையில் இந்திய ஆயுதப்படைகள் ஹைதராபாத் மாநிலத்தை ஆக்கிரமித்து நிஜாமை வீழ்த்தி, மாநிலத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தன. 1956 ஆம் ஆண்டு வரை பீடு இந்திய அரசுடன் இணைக்கப்பட்ட ஹைதராபாத் மாநிலத்தில் இருந்தது. 1960 ஆம் ஆண்டு மே 1 அன்று மகாராஷ்டிரா மாநிலம் மொழியியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. பின்னர் பீடு மாவட்டம் மகாராஷ்டிராவின் ஒரு பகுதியாக மாறியது.[2]
அமைவிடம்
தொகுபீடு டெக்கான் பீடபூமியில் பென்சுரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ( பெண்டுசுரா அல்லது பிந்துசாரா என்றும் அழைக்கப்படுகிறது). பென்சுரா ஆறு என்பது கோதாவரி ஆற்றின் துணை கிளை நதி ஆகும். இது வாகிரா கிராமத்திற்கு அருகில் பீடு நகரிலிருந்து தென்மேற்கே 30 கி.மீ தொலைவில் உள்ள பாலகாட் மலைத்தொடரில் இருந்து உருவாகிறது. இந்த நதி நகரத்தை சிறிய கிழக்கு மற்றும் பெரிய மேற்கு என இரு பகுதிகளாக பிரிக்கிறது. பாலகாட் மலைத்தொடர் நகரத்திற்கு தெற்கே 10 கி.மீ வரை பரவியுள்ளது. நகர வரலாற்றில் கன மழையினால் ஏற்படும் வெள்ளத்தினால் கணிசமான அளவு உயிரிழப்புக்களும், பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. 23 சூலை 1989 அன்று நகரத்தில் மூன்று வாழ்விடங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் ஏராளமானோர் பலியானதுடன், பல மில்லியன் கணக்கான பொருட் சேதம் ஏற்பட்டது.[3]
காலநிலை
தொகுநகரம் அரை வறண்ட காலநிலை , வெப்பமான காலநிலை மற்றும் வறண்ட காலநிலை ஆகிய முக்கிய மூன்று பருவங்களைக் கொண்டு. கோடைக் காலம் பிப்ரவரி நடுப்பகுதி முதல் சூன் வரை ஏறத்தாழ ஐந்து மாதங்கள் நீளமானது. கோடையின் சராசரி வெப்பநிலை 31 ° C (87.8 ° F) - 40 ° C (104 ° F) இடையில் காணப்படும். ஆண்டின் வெப்பமான மாதமான மே சராசரியாக 42 ° C (107.6 ° F) வெப்பநிலையைக் கொண்டிருக்கும். குளிர்காலம் குறுகியது. குளிர்கால சராசரி வெப்பநிலை 12 ° C (53.6 ° F) - 20 ° C (68 ° F) வரையில் காணப்படும். திசம்பர் மாதம் வருடத்தின் குளிரான மாதமாகும். குளிர்காலத்தில் ஈரப்பதம் மிகக் குறைவாக இருக்கும். திசம்பர் வருடத்தின் வறண்ட மாதமாகும். ஆண்டு சராசரி மழை 66.6 செ.மீ (26.22 அங்குலங்கள்) ஆகும். [4] ஒரு வருடத்தில் சராசரி மழை நாட்களின் எண்ணிக்கை 41 ஆகும். செப்டம்பர் வருடத்தின் அதிக மழையைப் பெறும் மாதமாகும். சூலை மாதம் அதிகபட்ச மழை நாட்களைக் கொண்டுள்ளது. பீடு நகர காலநிலையை புனே நகரத்தின் காலநிலையுடன் ஒப்பிடலாம்.
புள்ளிவிபரங்கள்
தொகு2001 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி[5] பீடு நகரத்தின் மக்கட் தொகை 138,091 ஆகும். மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 71,790 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 66,301 ஆகவும் காணப்பட்டது. பிறப்பு விகிதம் 15.9 ஆகும். இது தேசிய சராசரியான 22 ஐ விட குறைவாகும். இறப்பு விகிதம் 3% ஆகும், இது தேசிய சராசரியான 8.2% ஐ விட குறைவாகும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் குறைந்த பாலின விகிதத்தை பீடு மாவட்டம் கொண்டுள்ளது. 2011ம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி ஆறு வயதிற்கு உட்பட்டோரில் 1000 சிறுவர்களுக்கு 801 என்ற சிறுமிகள் என்ற பாலின விகிதத்தை கொண்டுள்ளது. மகாராட்டிர மாநிலத்தின் 1000 சிறுவர்களுக்கு 883 சிறுமிகள் என்ற குழந்தை பாலின விகிதம் காணப்படுகின்றது.[6]
இந்த சிறிய நகரம் இந்தியாவின் மத மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கான சான்று ஆகும். 69.15 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் இந்து, முஸ்லீம், பௌத்த, சமண , கிறிஸ்தவ மற்றும் சீக்கிய சமூகங்கள் வாழ்கின்றார்கள்.
சான்றுகள்
தொகு- ↑ "Mahārāshtra (India): State, Major Agglomerations & Cities - Population Statistics, Maps, Charts, Weather and Web Information". www.citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.
- ↑ "The Gazetteers Department - Bhir". web.archive.org. 2007-02-24. Archived from the original on 2007-02-24. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ Nathapuri, Abdul Hamīd (1998). Zilla Bīr Kī Tārīkh (History of Beed District) (in Urdu). Asian Printing Press, Gulshan Colony, Jogeshwari (W) Mumbai.
- ↑ "Wayback Machine". web.archive.org. 2007-09-28. Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Archived from the original on 2004-06-16.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "News18.com: CNN-News18 Breaking News India, Latest News Headlines, Live News Updates". News18 (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2012-10-15. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.