கேசவ பிரசாத் மௌரியா
கேசவ பிரசாத் மௌரியா (Keshav Prasad Maurya) (பிறப்பு: 7 மே 1969), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் துணை முதலமைச்சராக உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், வணிகரும் ஆவர்.
கேசவ பிரசாத் மௌரியா | |
---|---|
2017ல் கேசவ பிரசாத் மௌரியா | |
7வது துணை முதலமைச்சர், உத்தரப் பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 மார்ச் 2017 | |
முதலமைச்சர் | யோகி ஆதித்தியநாத் |
ஊரக வளர்ச்சி அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 மார்ச் 2022 | |
பொதுத்துறை அமைச்சர் | |
பதவியில் 19 மார்ச் 2017 – 25 மார்ச் 2022 | |
உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 மார்ச் 2017 | |
சட்ட மேலவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 செப்டம்பர் 2017 | |
தலைவர், உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் | |
பதவியில் 8 ஏப்ரல் 2016 – 31 ஆகஸ்டு 2017 | |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 26 மே 2014 – 21 செப்டம்பர் 2017 | |
தொகுதி | புல்பூர் மக்களவை தொகுதி |
உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2012–2014 | |
தொகுதி | சிரத்து சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 மே 1969 சிராத்து, கௌசாம்பி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | பிரயாகை, உத்தரப் பிரதேசம் |
கல்வி | இளங்கலை பட்டப் படிப்பு |
வேலை | வணிகர், அரசியல்வாதி |
இணையத்தளம் | keshavprasadmaurya |
As of 17 டிசம்பர்,, 2016 மூலம்: [1] |
அரசியல்
தொகுஇளமையில் இவர் ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தில் தொடர்புடையவராக இருந்தார். மேலும் ராம ஜென்ம பூமி இயக்கத்தில் பங்கு கொண்டார். பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அணி மற்றும் விவசாயிகள் அணியின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். 2012ல் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2014ல் புல்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். ஏப்ரல் 2016ல் உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.[1] 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சிராத்து சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற கேசவ பிரசாத் மௌரியா 18 மார்ச் 2017 அன்று துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.[2] 9 செப்டம்பர் 2017 முதல் இவர் உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "From tea seller to state party chief, Keshav Maurya is BJP's face in UP". Hindustan Times. 2016-04-09. Archived from the original on 13 November 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
- ↑ "Keshav Prasad Maurya, the deputy CM rewarded for BJP win in UP". The Times of India. Archived from the original on 2 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.