கௌசாம்பி மாவட்டம்
கௌசாம்பி மாவட்டம் (இந்தி: कौशाम्बी ज़िला, உருது: کوشامبی ضلع) இந்தியாவின், உத்தரப் பிரதேச மாநில மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் மன்ஜ்ஹன்பூர். இம்மாவட்டம் அலகாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பண்டைய கௌசாம்பி நகரம் பொழிவுடன் விளங்கியது.
கௌசாம்பி மாவட்டம் कौशाम्बी ज़िला کوشامبی ضلع | |
---|---|
![]() கௌசாம்பிமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | அலகாபாத் |
தலைமையகம் | மன்ஜ்ஹன்பூர் |
பரப்பு | 1,903.17 km2 (734.82 sq mi) |
மக்கட்தொகை | 1,596,909 (2011) |
படிப்பறிவு | 63.69% |
வட்டங்கள் | 3 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பொருளாதாரம் தொகு
2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கௌசாம்பி மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]
மக்கள் வகைப்பாடு தொகு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி கௌசாம்பி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,596,909.[2] இது தோராயமாக கினி-பிசாவு நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 313வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 897 inhabitants per square kilometre (2,320/sq mi).[2] மேலும் கௌசாம்பி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 23.49%.[2] கௌசாம்பி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 905 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் கௌசாம்பி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 63.69%.[2]
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).