கேட் ரூடி (Kate Rhudy) இவர் ஓர் அமெரிக்க நாட்டுப்புற-பாப் மற்றும் நாட்டுப் பாடகரும் மற்றும் பாடலாசிரியரும், இசைக்கலைஞர் மற்றும் பதிவு கலைஞர் ஆவார். மேலும் இவர் நன்கு பயிற்சி பெற்ற ஒரு பாரம்பரிய வயலின் இசைக்கலைஞராவார். வட கரோலினாவின் பூன் பகுதில் இவர் பல உள்ளூர் இசைக்குழுக்களில் பாடி, ஒரு இசையமைப்பவராக நகர்ந்து நாஷ்விலில் மேலும் இசைத் துறையில் சாதனையைத் தொடரச் சென்றார். பின்னர் இவர் தனது சொந்த ஊரான ராலீக்கு திரும்பி, ஒரு தனிக் கலைஞராக நிகழ்ச்சிகளை வழங்குவதைத் தொடங்கினார். 2017 ஆம் ஆண்டில், இவர் தனது முதல் தொகுப்பான ராக் என் ரோல் ஐன்ட் ஃபார் மீ என்ற பாடல் தொகுப்பை வெளியிட்டார் .

கேட் ரூடி
பிறப்பிடம்ராலீ, வட கரொலைனா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இசை வடிவங்கள்நாட்டுப்புறம் - பாப், நாட்டுப் பாட்டு, அமெரிக்கானா
தொழில்(கள்)பாடகர்-பாடலாசிரியர், இசையமைப்பாளர்
இசைத்துறையில்2016 முதல் தற்போது வரை
இணைந்த செயற்பாடுகள்மாண்டலின் ஆரஞ்ச்
மிப்சோ
இணையதளம்katerhudy.com

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

ரூடி வட கரோலினாவின் ராலீ பகுதியைச் சேர்ந்தவர். [1] இவர் ராலே சார்ட்டர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அங்கு இவர் கிராஸ் கன்ட்ரியில் ஓடினார். (கிராஸ் கன்ட்ரி ஓடுதல் என்பது ஒரு விளையாட்டாகும், இதில் அணிகள் மற்றும் தனிநபர்கள் அழுக்கு அல்லது புல் போன்ற இயற்கை நிலப்பரப்புகளில் திறந்தவெளிகளில் ஒரு பந்தயத்தை நடத்துகிறார்கள்) [2] பின்னர் இவர் அப்பலாச்சியன் மாநில பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகள் பயின்றார். ஆனால் இசைத் தொழிலைத் தொடர 2016இல் பள்ளியை விட்டு வெளியேறினார். [3] [4] ஒரு குழந்தையாக, ரூடி பாரம்பரிய வயலினில், சுசுகி முறையில் பயிற்சி பெற்றார். மேலும் ஒலி இசையைச் சுற்றி வளர்ந்தார். பெரும்பாலும் தனது மூத்த சகோதரியுடன் தென்மேற்கு வர்ஜீனியாவில் ஃபிட்லர் மாநாடுகளில் கலந்து கொண்டார். [5] [6] இவர் தனது ஐந்து வயதிலேயே பிடில் வாசிக்க ஆரம்பித்தார். ஒன்பது வயதில் மாண்டலின் வாசித்தார். [7] ரூடி பாப்டிஸ்டாக வளர்க்கப்பட்டார். மேலும் புல்லன் நினைவு அறக்கட்டளை பாப்ஸ்டிட் தேவாலயத்தில் கலந்து கொண்டார். இது அகனள், அகனன், ஈரர், திருனர் உரிமைகளை ஆதரித்ததற்காக தெற்கு பாப்டிஸ்ட் மாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தொழில் தொகு

ரூடி பிடில் வாசித்தார். மேலும் ஆண்டி பெரெல் மற்றும் எதிர்கால டிரெயின் என்ற இசைக்குழுவின் உறுப்பினராக இசைப்பாடல்களைப் பாடினார். இவர் அந்த இசைக்குழுவுக்கு டோலி பார்ட்டனின் ஜோலின் மற்றும் லோரெட்டா லின் எழுதிய யூ ஐன்ட் வுமன் எனப் என்ற இரண்டு தனிப்பாடல்களைப் பாடினார். ரூடியின் பாடல் டெக்சாசில் உள்ள ஒரே அழகான விஷயம் இசைக்குழுவில் இவரது நேரத்தைப் பற்றியது. [7]

இசைத் தொகுப்பு தொகு

ரூடி தனது முதல் இசைத் தொகுப்பான ராக் என் ரோல் ஐன்ட் ஃபார் மீ என்பதில் 2017 இல் மாண்டோலின் ஆரஞ்சின் ஆண்ட்ரூ மார்லினுடன் இணைந்து பணியாற்றினார். [5] [8] [9] இந்த தொகுப்பு ரூடியின் தனிப்பட்ட பெண்ணிய நம்பிக்கைகள், இசைக்குழுக்களில் பாடும் நேரங்கள், இளங்கலை மாணவராக அனுபவங்கள், அரசியல் மற்றும் இசைத் துறையில் பெண்கள் மீதான பாலியல் தன்மை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டது. [3] [10] இவர் இந்த தொகுப்பை வட கரோலினாவின் சேப்பல் ஹில்லில் உள்ள ரப்பர் ரூம் அரங்கத்தில் தயாரித்தார். [11]

2018ஆம் ஆண்டில், சாகோரி ஹில்ஸ் கிராஸ்ரூட்ஸ் விழாவில் ரூடி தனது நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். [12]

வெளியீடு தொகு

2019 திசம்பரில்ல், ரூடி டான்ஸ் இட் அவே என்ற ஒற்றை பாடலை வெளியிட்டார். இது 2017 ஆம் ஆண்டில் தனது தஒகுப்பிற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட முதல் இசைத் தொகுப்பாகும். [13] இந்த தனிப்பாடலை லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ராலேயில் ஜாக் ஹாலன்பெக் என்பவர் தயாரித்திருந்தார். [14] [15]

2020 சனவரியில், ரூடி தனது சுற்றுப்பயணத்தில் மாண்டோலின் ஆரஞ்சில் சேர்ந்தார். [16] [17] இவர் முன்னர் 2017ஆம் ஆண்டில் இருவர் பாடிய ஒரு தொடக்க நிகழ்ச்சியாக நிகழ்த்தினார். [18] ரூடி மிப்ஸோவுடன் இணைந்து நிகழ்ச்சியை வழங்கியுள்ளார். [19]

ரூடி தி டிக்ஸி சிக்ஸ், நிக்கல் க்ரீக் மற்றும் அலிசன் க்ராஸ் மற்றும் அப்பலாச்சியன் இசையையும் தனது இசையில் தாக்கங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். [20]

குறிப்புகள் தொகு

  1. "A Winter Music Fest Q&A session with Kate Rhudy". Morganton.com | The News Herald (in ஆங்கிலம்). December 13, 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  2. "Kate Rhudy". Athletic.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  3. 3.0 3.1 Griffith, Spencer (2018-01-24). "Rachel Baiman and Kate Rhudy Find Common Ground in the Personal and Political". INDY Week (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Kate Rhudy biography". Last.fm (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  5. 5.0 5.1 Wynne, Griffin (2019-08-09). "Kate Rhudy and her Southern Community". She Shreds Magazine (in ஆங்கிலம்). Archived from the original on 2020-03-18. பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  6. Griffith, Spencer (2018-09-26). "More Kinda, Sorta Bluegrass". INDY Week (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. 7.0 7.1 Griffith, Spencer (2018-12-27). "Listening to Dolly Parton, the Dixie Chicks, and Leon Bridges with Kate Rhudy". INDY Week (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Kate Rhudy". Purple Fiddle (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  9. Shelton, Charlie; Stasio, Frank (June 16, 2017). "Kate Rhudy Offers Songs With Serenity On Debut Album". North Carolina Public Radio (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  10. Gentry, Shannon Rae (2019-03-26). "WOMEN ARE THE BEST! Kate Rhudy and Libby Rodenbough stop over at Gravity on Smooch Tour". ILM's Alternative Weekly Voice (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  11. Editors, Amplify (2017-01-27). "Kate Rhudy Single Session". Medium (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-18. {{cite web}}: |last= has generic name (help)
  12. "Kate Rhudy". Shakori Hills GrassRoots Festival of Music & Dance (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-03-18. பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  13. "KATE RHUDY | First Avenue". first-avenue.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  14. Burns, Brian (December 31, 2019). "PREMIERE: Listen to Kate Rhudy's New Single 'Dance It Away'". North Carolina Public Radio (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  15. "50 Local Albums and Songs We Loved in 2019". INDY Week (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-01-08. பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.[தொடர்பிழந்த இணைப்பு]
  16. "Kate Rhudy". Kate Rhudy (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  17. "Dead Horses and Kate Rhudy play Cafe 939". The BIRN (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-01-31. Archived from the original on 2020-03-18. பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  18. Schram, Dan (2017-08-04). "Video: Mandolin Orange Plays to a Packed House at NCMA". INDY Week (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.[தொடர்பிழந்த இணைப்பு]
  19. "HP Arts Council Presents Third Thursday Featuring Kate Rhudy & Joseph Terrell | High Point Arts Council" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  20. Halsey, Derek. "Kate Rhudy bringing original music to Boone". Watauga Democrat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேட்_ரூடி&oldid=3663892" இலிருந்து மீள்விக்கப்பட்டது