கேப்ஸ்யூல் எண்டோஸ்கோபி

கேப்சியூல் எண்டோஸ்கோப்பி, (Capsule endoscopy) மருத்துவத்தில் செரிமானத் தொகுதியைக் காணொளியாகப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு புதிய வழியாகும். மாத்திரை வடிவில் ஒரு சிறிய புகைப்படக்கருவி பயன்படுத்தப்படுகிறது. இம்மாத்திரை வடிவப் புகைப்படக்கருவி 27மிமீ நீளமும் 11மிமீ விட்டமும் கொண்டது. ஒரு நோயாளி விழுங்கிவிடும் மாத்திரை போன்ற புகைப்படக்கருவி பின்னர், அவரது இரைப்பை குடல் உள்ளே படங்களை எடுக்கும். காப்ஸ்யூல் எண்டோஸ்கோபி முறை மற்றைய எண்டோஸ்கோபி முறைகளால் பார்க்க முடியாத சிறுகுடல் பகுதியைக்கூட ஆய்வுசெய்ய உதவுகிறது.

மாத்திரையின் புகைப்படம்
எண்டோஸ்கோபி காப்ஸ்யூலின் புகைப்படக்கருவி முனை.

பெரும்பாலும் இந்த வகையான பரிசோதனைகள் இரத்தக்கசிவு மற்றும் வயிற்றுவலிக்கான காரணங்களைக் கண்டறிய உதவுகிறது. இந்த வகையான நடைமுறை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) 2001 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்ஸ்யூல்_எண்டோஸ்கோபி&oldid=3711597" இலிருந்து மீள்விக்கப்பட்டது