கேரளீயம்

மலையாள மொழி மாத இதழ்

கேரளீயம் (Keraleeyam) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் இருந்து வெளியிடப்படும் மலையாள மொழி மாத இதழாகும். பொது ஆர்வ இதழான இது சக்ரத்தாயுதே கேரளீயம் என்றும் அழைக்கப்படுகிறது. 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு மாதப் பத்திரிகையாக வெளியிடப்பட்டது. பின்னர் இரு வார இதழாகவும் பின்னர் ஒரு சிறுபத்திரிகையாகவும் மாறியது. 2005 ஆம் ஆண்டு முதல் கேரளீயம் மாத இதழாக வெளிவருகிறது. கேரளீயம் கூட்டாய்மா' வெளியீட்டாளரின் முன்முயற்சியால் விவசாயம், சுகாதாரம், சுற்றுச்சூழல், மனித உரிமைகள், கல்வி, பாலின சமத்துவம், தலித் மற்றும் ஆதிவாசிகள் போன்ற மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை கேரளீயம் முன்வைக்கிறது. கேரளீயம் இதழ் கேரளாவில் நடந்த பல மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு காட்டியுள்ளது.[1][2][3]

கேரளீயம்
Keraleeyam
எசு. சரத்
வகைமாத இதழ்
வெளியீட்டாளர்கேரளீயம் கூட்டாய்மா
முதல் வெளியீடுநவம்பர் 1998
நாடுஇந்தியா
அமைவிடம்திருச்சூர், கேரளம்
மொழிமலையாளம்
வலைத்தளம்keraleeyammasika.com

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாவோயிசுட்டுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி கேரள காவல்துறையால் கேரளீயம் அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது. மூன்று பேர் காவலில் வைக்கப்பட்டனர் ஆனால் முழுமையான விசாரணைக்குப் பிறகு அடுத்த நாள் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "About us: Jaagrathayude Keraleeyam" பரணிடப்பட்டது 2021-07-28 at the வந்தவழி இயந்திரம். Keraleeyam. Retrieved 31 December 2014.
  2. B. R. P. Bhaskar (4 January 2015). "മാവോയിസ്റ്റ് വേട്ട കാടുകയറുമ്പോള്‍". Mathrubhumi Illustrated Weekly. 
  3. Dr. Azad. "സമരകേരളത്തിന്റെ നാവരിയുന്നു". Madhyamam Weekly. http://www.madhyamam.com/weekly/3081. 
  4. Ajmal Khan (8 February 2015). "When Everyone Became a Maoist in Kerala". Sanhati.com. Retrieved 13 February 2015.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரளீயம்&oldid=3582914" இலிருந்து மீள்விக்கப்பட்டது