கேரள இலக்கமுறை பல்கலைக்கழகம்
கேரள இலக்கமுறை அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Kerala University of Digital Sciences, Innovation and Technology) இந்திய மாநிலமான கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. மாநிலப் பல்கலைக்கழகமான இது கேரள இலக்கமுறை பல்கலைக்கழகம் என்று பொதுவாக அறியப்படுகிறது.[1] 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கேரளாவின் இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனத்தை மேம்படுத்தி 2020 ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. கேரளாவின் 14 ஆவது மாநில பல்கலைக்கழகம் மற்றும் மாநிலத்தின் முதல் இலக்கமுறை பல்கலைக்கழகம் என்ற சிறப்பைப் பெற்றது.[2]
குறிக்கோளுரை | ஒரு பொறுப்பான இலக்கமுறை உலகத்தை நிர்வகித்தல் |
---|---|
வகை | மாநிலம் |
உருவாக்கம் | 2020 |
வேந்தர் | கேரள ஆளுநர்களின் பட்டியல் |
துணை வேந்தர் | செச்சி கோப்பிநாத்து |
அமைவிடம் | , , |
இணையதளம் | duk |
வரலாறு
தொகுஇந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம், கேரளாவில் 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. முதலில் திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள ஒரு வளாகத்தில் செயல்பட்டது. பின்னர் தொழில்நுட்ப நகரம் உருவாக்கப்பட்டு அங்கு வளாகம் கட்டப்பட்டதும் இடம்பெயர்ந்தது.[3] and was affiliated to Cochin University of Science and Technology.[4] கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இந்நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது.[4] 2020 ஆம் ஆண்டில் கேரள அரசின் அரசாணை மூலம் ஒரு பல்கலைக்கழகமாக இந்நிறுவனம் தரம் உயர்த்தப்பட்டது.[5]
வளாகம்
தொகுகுடியிருப்பு வளாகம் திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்ப நகரத்தின் வளாகத்தில் அமைந்துள்ளது.[1]
தலைமை
தொகுகேரளாவின் ஆளுநர் பதவியின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், தகவல் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பு அமைச்சரின் பரிந்துரையின்படி இப்பல்கலைக்ழகத்தின் சார்பு வேந்தராக உள்ளார்.[6] The கேரள அரசு had appointed Saji Gopinath as the first Vice-chancellor of the university.[7]
முக்கியப் பள்ளிகள்
தொகு- கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பள்ளி
- மின்னணுவியல் மற்றும் தானியங்கிப் பள்ளி
- இலக்கமுறை அறிவியல் பள்ளி
- தகவலியல் பள்ளி
- இலக்கமுறை மனிதநேயம் மற்றும் தாராளமைய கலைகள் பள்ளி
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Digital varsity status for IIITM-K" (in en-IN). The Hindu. 2020-01-17. https://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/digital-varsity-status-for-iiitm-k/article30579868.ece.
- ↑ "IITMK becomes Kerala's first Digital University". India Today. January 15, 2020.
- ↑ "New campus for IIITM-K at Technocity". The Hindu. 17 February 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/New-campus-for-IIITM-K-at-Technocity/article15447745.ece.
- ↑ 4.0 4.1 "Who We Are". IIITM-K. Archived from the original on 3 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "IITMK upgraded to a digital university". Outlook India.
- ↑ https://prsindia.org/files/bills_acts/bills_states/kerala/2020/KL_Digital_Sciences_Innovation_Technology_Ordinance.pdf [bare URL PDF]
- ↑ "Saji Gopinath appointed first VC of digital science varsity | Thiruvananthapuram News - Times of India". The Times of India.