கேரிடே
கேரிடே Kerriidae | |
---|---|
உரோசா இதழ் வடிவ அரக்கு பூச்சி (பாராட்டாச்சார்டினா டெகோரெல்லா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கெமிப்பிடிரா
|
குடும்பம்: | கேரிடே
|
பேரினம் | |
including:
|
கேரிடே என்பது பொதுவாக அரக்குப் பூச்சிகள் அல்லது அரக்கு செதில்கள் என்று அழைக்கப்படும் செதில் பூச்சிகளின் குடும்பமாகும். மெட்டாடாசார்டியா, டாச்சார்டியெல்லா, ஆசுட்ரோடாச்சார்டியா, அப்ரோடாசார்டினா, டாச்சர்டினா மற்றும் கேரியா பேரினங்களின் சில சிற்றினங்கள் வணிக நோக்கங்களுக்காக வளர்க்கப்படுகின்றன. இருப்பினும் பொதுவாக வளர்க்கப்படும் சிற்றினம், கேரியா லாக்கா ஆகும். இந்த பூச்சிகள் ஒரு மெழுகு பிசினைச் சுரக்கின்றன. இது சேகரிக்கப்பட்டு வணிக ரீதியாக அரக்கு மற்றும் செல்லாக்காக மாற்றப்படுகிறது. இப்பொருட்கள் சாயங்கள், அழகுசாதனப் பொருட்கள், உணவு மெருகூட்டல், மரப்பூச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது.
முக்கியச் சிற்றினங்கள்
- கேரியா லேக்கா-அரக்குப் பூச்சி
- பாராட்டாச்சார்டினா டெகோரெல்லா-உரோசா இதழ் அரக்குப் பூச்சி
- பாராட்டாச்சார்டினா சூட்டோலோபாட்டா-தொங்கு அரக்குப் பூச்சி
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Ben-Dov, Yair; et al. (Miller, Douglass R.; Gibson, Gary A. P.) (2006). A Systematic Catalogue of Eight Scale Insect Families (Hemiptera: Coccoidea) of The World. Elsevier Science. p. 247. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-52836-0.
வெளி இணைப்புகள்
தொகு- இது தொடர்பான தரவுகள்கெர்ரிடேவிக்கிப்பீடியாக்களில்
- பொதுவகத்தில் Kerriidae தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- வகைபிரித்தல்