கேரோப்பியைட்டு
ஆலைடு கனிமம்
கேரோப்பியைட்டு (Carobbiite) என்பது KF என்ற |மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பொட்டாசியம் புளோரைடு என்றழைக்கப்படும் இக்கனிமம் இலேசானது ஆகும். மோவின் கடினத்தன்மை அளவுகோலில் இக்கனிமத்திற்கு 2-2.5 என்ற எண் மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது. நிறமற்று கனசதுர வடிவத்தில் இக்கனிமம் படிகமாகிறது [1]. நேபிள்சு மாகாணத்தின் சோம்மா மலைகள், இட்டாலியின் வெசுவியசு மலைகள் போன்ற இடங்களில் கேரோப்பியைட்டு காணப்படுகிறது. 1956 ஆம் ஆண்டு இத்தாலி நிலவியலாளர் குய்டோ கேரோப்பி இக்கனிமத்தைக் கண்டறிந்தார் [2]. சப்பானின் ஒக்கைடோ தீவிலும் இது காணப்படுவதாக கூறப்படுகிறது [3].
கேரோப்பியைட்டு Carobbiite | |
---|---|
கேரோப்பியைட்டு | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | KF |
இனங்காணல் | |
மோலார் நிறை | 58.10 கிராம் |
படிக அமைப்பு | சம அளவு - ஆறு எண்கோணம் |
பிளப்பு | தனித்துவம்/தெளிவு |
மோவின் அளவுகோல் வலிமை | 2-2.5 |
மிளிர்வு | பளபளக்கும் |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 2.505 |
அடர்த்தி | 2.524 |
ஒளியியல் பண்புகள் | சமத்திருப்பம், n=1.362. |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் கேரோப்பியைட்டு கனிமத்தை Crb[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://webmineral.com/data/Carobbiite.shtml Mineral data on Carobbiite
- ↑ http://rruff.geo.arizona.edu/doclib/hom/carobbiite.pdf Mineral Handbook
- ↑ http://www.mindat.org/min-908.html Mindat
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.