கேர்கைலன் பீடபூமி

கேர்கைலன் பீடபூமி அல்லது கேர்கெலென் பீடபூமி (Kerguelen Plateau,/ˈkɜːrɡələn/, /kərˈɡlən/)[1] தெற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள கடற்படுகை பீடபூமியும் பெரும் அனற்பாறை திரட்சியும் (LIP) ஆகும்.[2] இது ஒரு குறுங்கண்டமும் மூழ்கிய கண்டமும் ஆகும். இது ஆத்திரேலியாவிற்குத் தென்மேற்கே 3,000 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பீடபூமி சப்பானைப் போல மூன்று மடங்கு பெரியது. இந்தப் பீடபூமி வடமேற்கு-தென்கிழக்கு திசையாக 2,200 கிமீ தொலைவிற்கு நீரினடியில் பெரும் ஆழத்தில் அமைந்துள்ளது.

Topography of the Kerguelen Plateau. On either side of the Central Kerguelen Plateau, the Elan Bank and William Ridge protrude west and east.
Location of the plateau - white spot is Kerguelen Island

இந்தப் பீடபூமி கெர்கைலன் கடல் எரிமலையால் உருவாகியுள்ளது; 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கோண்டுவானா பிரிந்ததிலிருந்து உருவாகத் தொடங்கியது. இந்தப் பீடபூமியின் சிறுபகுதி கடல் மட்டத்திற்கு மேலே உள்ளது. இவை பிரெஞ்சுப் பகுதியான கெர்கைலன் தீவும் ஆத்திரேலியப் பகுதியான ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும் ஆகும். ஏர்ட் தீவிலும் மக்டொனால்ட் தீவிலும் எரிமலைகள் அவ்வப்போது குமுறுகின்றன.

மேற்சான்றுகள்

தொகு
  1. ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி
  2. UT Austin 1999

உசாத்துணைகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேர்கைலன்_பீடபூமி&oldid=3929251" இலிருந்து மீள்விக்கப்பட்டது