கே. அசுங்பா சங்கதம்

கே. அசுங்பா சங்கதம் (K. Asungba Sangtam) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர் மற்றும் நாகாலாந்திலிருந்து மக்களவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். [1] இவர் நாகாலாந்து மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னிரண்டாவது மற்றும் பதின்மூன்றாவது மக்களவை உறுப்பினராக இருந்தார். [2] [3]

கே. அசுங்பா சங்கதம்
பிறப்பு27 சூலை 1945 (1945-07-27) (அகவை 78)
இட்சாரு, துயென்சாங் மாவட்டம், நாகாலாந்து, இந்தியா
பணிஅரசியல்வாதி
சமூக சேவகர்
பெற்றோர்ஓபோன்கி
வாழ்க்கைத்
துணை
யாசிலா அசங்
பிள்ளைகள்இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள்
விருதுகள்பத்மசிறீ

சுயசரிதை தொகு

வடகிழக்கு இந்திய மாநிலமான நாகாலாந்தில் உள்ள துயன்சாங் மாவட்டத்தில் உள்ள சாரு என்ற கிராமத்தில் 27 சூலை 1945 இல் பிறந்தார். இவர் தனது பள்ளிக் கல்வியை சில்லாங்கில் உள்ள செயின்ட் எட்மண்ட் பள்ளியில் பயின்றார் (1962). மேலும், 1964-ஆம் ஆண்டில் ஷில்லாங்கில் உள்ள செயின்ட் எட்மண்ட் கல்லூரியில் தனது பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார். தில்லியில் உள்ள செயின்ட் இசுடீபன் கல்லூரியில் தனது பட்டப்படிப்பைத் தொடங்கிய இவர், நாகாலாந்தில் உள்ள மோகோக்சுங்கில் உள்ள பசல் அலி கல்லூரியில் 1970 இல் முடித்தார். [4] இவர் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தார். இவர் நாகாலாந்து பிரதேச காங்கிரசு கமிட்டியின் உறுப்பினராக இருந்தார். 1987-ஆம் ஆண்டில் இணைச் செயலாளராகவும், 1989-ஆம் ஆண்டில் செயலாளராகவும் பணியாற்றினார், ஆனால் 2014-ஆம் ஆண்டில் பதவி விலகினார். மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், தகவல் தொடர்புக் குழுவின் உறுப்பினராகவும், வேளாண் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 2004 மற்றும் 2009 பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டார், ஆனால் தோல்வியடைந்தார். [5] 2009 ஆம் ஆண்டில், பொது விவகாரங்களில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. [6]

இவர் 2005 ஆம் ஆண்டு முதல் தில்லியின் பாப்டிஸ்ட் சர்ச் டிரஸ்ட் அசோசியேஷன் (BCTA), பிஎம்எஸ் வேர்ல்ட் மிஷனின் கூட்டமைப்பின் தலைவராக இருந்து வருகிறார், [7] அவர் யாஷிலா அசுங்கை மணந்தார் மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Biographical Sketch – Member of Parliament". India Press. 2016. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
  2. "Statistical Report on General Elections, 1998" (PDF). Election Commission of India. 2016. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
  3. "Statistical Report on General Elections, 1999" (PDF). Election Commission of India. 2016. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
  4. "National Election Watch – 2009". My Neta. 2009. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
  5. "Nagaland: NPF nominee to be lone representative in LS". First Post. 16 May 2014. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
  7. "Top honour for Indian partner". BMS World Mission. 2016. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._அசுங்பா_சங்கதம்&oldid=3813759" இலிருந்து மீள்விக்கப்பட்டது