கே. இரவி அருணன்

இந்திய அரசியல்வாதி

கே இரவி அருணன் (K. Ravi Arunan) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மேலும், இவர் 1996 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். [2]

2001 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அருணன் தமிழ் மாநில காங்கிரசிலிருந்து விலகி பாரதிய சனதா கட்சியில் உறுப்பினரானார். [3] இவர் 2001 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தென்காசித் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தமிழ் மாநில காங்கிரசிற்கும் இடையிலான தேர்தல் உடன்படிக்கையால் இழந்தார்.[4]2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில், தென்காசி சட்டமன்றத் தொகுதியில் பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 5190 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைக் கைப்பற்றினார்.[5][6]

மேற்கோள்கள் தொகு

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 10. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  3. Muthahar, Seyed (30 April 2001). "Name alternative candidate, Chidambaram tells Jayalalitha". The Hindu. http://www.thehindu.com/2001/04/30/stories/15302239.htm. பார்த்த நாள்: 2017-05-09. 
  4. Subramanian, T. S. (25 May 2001). "A fierce fight". Frontline 18 (10). http://www.frontline.in/static/html/fl1810/18100160.htm. பார்த்த நாள்: 2017-05-09. 
  5. "Stage set for a tri-corner contest in Tenkasi". The Hindu. 4 May 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/stage-set-for-a-tricorner-contest-in-tenkasi/article3128312.ece. பார்த்த நாள்: 2017-05-09. 
  6. "DMK front gets 9 in Nellai". The Hindu. 12 May 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/dmk-front-gets-9-in-nellai-dt/article3132175.ece. பார்த்த நாள்: 2017-05-09. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._இரவி_அருணன்&oldid=3528740" இலிருந்து மீள்விக்கப்பட்டது