கே. இராகோத்தமன்

கே. இராகோத்தமன், முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரணை செய்த சிபிஐ புலனாய்வு அதிகாரி ஆவார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளூந்தூர்பேட்டை வட்டத்தில் பிறந்த இராகோத்தமன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தின் பட்டமேற்படிப்பை முடித்து, 1968-ஆம் ஆண்டில் சிபிஐயில் உதவி ஆய்வாளாராக பணியில் சேர்ந்தார்.

இராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்த, கார்த்திகேயன் ஐ பி எஸ் தலைமையில் அமைக்கப்பட்ட சிபிஐ சிறப்பு புலானாய்வுக் குழுவில், தலைமைப் புலனாய்வு அதிகாரியாக கே. இராகோத்தமன் செயல்பட்டார்.

படைப்புகள் தொகு

36 ஆண்டுகள் பணியாற்றி, 2006-ஆம் ஆண்டில் கண்காணிப்பாளராக பணி ஓய்வு பெற்ற கே. இராகோத்தமன் இராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக Human bomb (மனித வெடிகுண்டு) எனும் ஆவணபடத்தை தயாரித்தார்.[1] மேலும் Conspiracy to Kill Rajiv Gandhi from CBI Files, Third Degree Crime Investigation Management : Crime and the Criminal, Assassination of Mahatma – Indira – Rajiv Gandhis மற்றும் Rarest of rare case - Murder of an advocate எனும் நான்கு ஆங்கில நூல்களையும், இராஜீவ் கொலை வழக்கு எனும் தமிழ் நூலையும் எழுதியுள்ளார்.[2] [3]

மறைவு தொகு

கே. இராகோத்தமன் தமது 76 வது அகவையில் கோவிட் பெருந்தொற்றால் 13 மே 2021 அன்று சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.[4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._இராகோத்தமன்&oldid=3515288" இலிருந்து மீள்விக்கப்பட்டது