கே. இராதாகிருஷ்ணன் (அறிவியலார்)

கே. ராதாகிருஷ்ணன் (பிறப்பு 29 ஆகத்து 1949) ஓர் இந்திய அறிவியலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் ஆவார்.[1]. அக்டோபர் 31,2009 அன்று இப்பதவியை முனைவர் ஜி. மாதவன் நாயரின் பணி ஓய்வினை அடுத்து ஏற்றார்.[2] இதற்கு முன்னர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரத்தின் நெறியாளராக இருந்துள்ளார். இந்திய மாநிலம் கேரளத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்ஞாலக்குடாவில் பிறந்தவர்.இந்திய புவிஇயற்பியல் ஒன்றிய வாழ்நாள் அங்கத்தினராகவும் உள்ளார்.நுண்கலைகளிலும் தேர்ச்சிபெற்ற இவர் கருநாடக இசைமுறையில் பாடவும் கதகளி நடனமும் தெரியும்.[3]

கே. ராதாகிருஷ்ணன்
பிறப்பு29 ஆகத்து 1949 (1949-08-29) (அகவை 72)
கேரளம், இந்தியா
வாழிடம்Flag of India.svg இந்தியா
தேசியம்Flag of India.svg இந்தியர்
துறைவிண்வெளி ஆராய்ச்சி
பணியிடங்கள்VSSC
கல்வி கற்ற இடங்கள்இ.தொ.க கரக்பூர் (Ph.D., 2000)
இ.மே.க பெங்களூரு (PGDM, 1976)
கேரள பல்கலைக்கழகம் (B.Sc. Engg., 1970)
அறியப்படுவதுசந்திரயாண்-1

பெற்றுள்ள சிறப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு