கே. எம். செரியன்

கே. எம். செரியன் (பிறப்பு 1942) என்பவர் இந்தியாவில் இதய மாற்று அறுவை மருத்துவம், குழந்தைகள் இதய அறுவை மருத்துவம், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று மருத்துவம் ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்ற மருத்துவ நிபுணர் ஆவார். இவர் 27000 க்கும் மேலாக இதய அறுவை சிகிச்சைகள் செய்தவர்.[சான்று தேவை]

இளமைக் காலம்

தொகு

கேரளத்தில் காயங்குளத்தில் பிறந்தார். தந்தை தோட்டத் தொழிலாளியாக மூணாறு என்னும் ஊரில் வேலை செய்தவர். மணிப்பால் மருத்துவக் கல்லூரியிலும் பின்னர் ஆத்திரேலியாவின் சிட்னியில் வின்சென்ட் மருத்துவமனையிலும் செரியன் கல்வி பயின்றார்

மருத்துவப்பணியும் பொறுப்புகளும்

தொகு

1975 இல் செரியன் இந்தியாவின் முதல் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தார். செரியன் 1995 இல் முதல் இதய மாற்று அறுவையை நிகழ்த்திக் காட்டினார். குழந்தைகளுக்கான இதய மாற்று சிகிச்சையில் இவர் முன்னோடியாகக் கருதப் படுகிறார். அதுபோலவே 1999இல் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சையும் செய்து சாதனை படித்தார். 1970 களில் ஆத்திரேலியா,அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நல்ல ஊதியம் பெற்று மருத்துவராகப் பணி செய்தார். ஆனாலும் 1975 இல் இந்தியாவுக்குத் திரும்பினார். இந்தியாவில் தொடர்வண்டித் துறையில் மருத்துவ அதிகாரியாக இருந்தார். பின்னர் அற நிறுவனமான மெட்ராசு மெடிக்கல் மிசனில் சேர்ந்தார். அம்மருத்துவ மனையில் 1987 முதல் 2004 வரை இயக்குநராக இருந்தார். 2004 ஆம் ஆண்டில் பிரான்டியர் லைப் லைன் என்னும் மருத்துவக் குழுமத்தைத் தொடங்கினார்.

விருதுகள்

தொகு

செரியனுக்கு 1991 இல் பத்மசிறீ பட்டம் வழங்கப்பட்டது. அதற்கு முன்பே ரயில் துறை அமைச்சர் விருதுகள் இரண்டு முறை பெற்றார். 2005 ஆம் ஆண்டில் வொக்கார்த் மருத்துவ விருது வழங்கப் பட்டது. மருத்துவத் தந்தை ஹிப்போகிரட்டீஸ் பிறந்தகமான கிரீசில் இவருடைய பெயர் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. சீனப் பல்கலைக் கழகங்களில் மதிப்புறு பேராசிரியராக செரியன் அழைக்கப் படுகிறார் உலக இதய நாள் என்று கொண்டாடப்படும் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் பக்கல் அன்று அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எம்._செரியன்&oldid=3241405" இலிருந்து மீள்விக்கப்பட்டது