கே. எஸ். ஶ்ரீபதி

கே. எஸ். ஶ்ரீபதி (K.S Sripathi) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1975-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2]

கே. எஸ். ஶ்ரீபதி
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
31 அகத்து 2008 – 31 அகத்து 2010
முன்னையவர்எல். கே. திரிபாதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

அரசுப் பணிகள் தொகு

1975 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழக அரசின் சிறப்புத் தலைமைச் செயலாளராக 2008 ஆகஸ்ட் 14ஆம் நாள் நியமிக்கப்பட்டார்.அதனை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த எல். கே. திரிபாதி பணி ஓய்வு பெற்றதை அடுத்து, தமிழகத்தின் 38-வது தலைமைச் செயலாளராக 31 அகத்து 2008 அன்று பொறுப்பேற்றார். 2010-ம் ஆண்டு அகத்து 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து 2010-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.[3] 2015-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.[4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._ஶ்ரீபதி&oldid=3855507" இலிருந்து மீள்விக்கப்பட்டது